TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 13 , 2018 2076 days 626 0
  • மனித மூளையைப் போன்று பணியாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மீக்கணினியான ஸ்பைக்கிங் நரம்பியல் வலையமைப்பு கட்டமைப்புக் கருவியின் செயல்பாடு (SpiNNaker - Spiking Neural Network Architecture) முதன்முறையாகத் தொடங்கப்பட்டது.
  • இந்த மீக்கணினி ஐக்கிய இராஜ்ஜியத்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் வடிவமைத்து கட்டமைக்கப்பட்டது.
  • உருது கலாச்சாரம் மற்றும் அதன் பாரம்பரியத்தை கொண்டாடுவதற்காக “ஜசன் இ - விராசத் இ - உருது” என்ற திருவிழாவை டெல்லி அரசாங்கம் அறிவித்துள்ளது. இத்திருவிழாவின் நோக்கம் உருது மொழியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகும். இது ஆறு நாள் திருவிழாவாகும். இத்திருவிழா 2018 ஆண்டு நவம்பர் 15 அன்று நிறைவடைய இருக்கிறது.
  • இந்திய அயல்நாட்டுப் பணி அதிகாரியான அபேய் குமார் மடகாஸ்கர் குடியரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். சுபிர் தத்தாவிற்கு மாற்றாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஆராய்ச்சி நிறுவனமான கனாலிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, திறன்பேசி (Smart Phone) சந்தையில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த அறிக்கையின்படி சீனா முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்