வங்காள விரிகுடாவில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி பின்னர் அது தீவிரமடைந்து புயலாக மாறியுள்ளது. இதற்கு ‘கஜா’ என பெயரிடப்பட்டுள்ளது.
லித்துவேனியாவின் தலைநகரான வில்னியஸில் கொச்சி மாநகராட்சி மற்றும் வில்னியஸ் நகரம் ஆகியவை இணைந்து ஒத்துழைப்பிற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘சர்வதேச நகர்ப்புற ஒத்துழைப்பு’ (International Urban Cooperation) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகமானது இந்திய காற்று சுழலி சான்றிதழ் திட்டம் (Indian Wind Turbine Certification Scheme- IWTCS) என்ற புதிய திட்டத்தின் வரைவைத் தயார் செய்துள்ளது.
இது சென்னையில் உள்ள தேசிய காற்று சக்திக்கான நிறுவனத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டது.
பாரத் மேட்ரிமோனி என்ற இணைய தளமானது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியை தனது விளம்பரத் தூதுவராக அறிவித்துள்ளது.