TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 20 , 2018 2200 days 669 0
  • இந்து காவியமான இராமாயணத்திற்கு சம்பந்தப்பட்ட முக்கிய இடங்களை உள்ளடக்கிய இராமாயண சுற்றுப்பாதையில் பயணிக்கும் சிறப்பு சுற்றுலா இரயிலானது, புதுடெல்லியின் சப்தர்ஜங் இரயில் நிலையத்திலிருந்து இந்தியன் இரயில்வேயால் துவங்கி வைக்கப்பட்டது.
    • இந்த இராமாயண பயணத்தின் பக்தர்கள் சுற்றுப் பாதையானது இந்தியாவில் ஒன்று, இலங்கையில் ஒன்று என இரண்டு பயண பாகங்களைக் கொண்டது.
  • 15,000 ரூபாய்க்கும் அதிகமாக ஊதியம் பெறும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு காலங்களான 26 வாரங்களில் முதல் 7 வாரங்களுக்கான ஊதியத்தினை அவர்களுக்கு வேலை அளித்த நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கும் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் பைத்தான் தாலுகாவில் உள்ள வாஹிகாவொன் மற்றும் தனகாவொன் கிராமங்களில் 2-வது மெகா உணவுப் பூங்காவை மத்திய உணவு பதப்படுத்துதல் தொழிற்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் திறந்து வைத்தார்.
  • ஆசியாவின் முதல் மற்றும் உலகின் மூன்றாவது நரம்பியல் மருத்துவரான T.S கனகா நீண்டகால உடல் நலக் குறைவுக்குப் பின் காலமானார். இவர் உலகின் முதல் மிகச்சில நரம்பியல் வல்லுநர்களில் ஒருவராவார்.
  • நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது அஜய் பூஷன் பாண்டேவை வருவாய்த் துறையின் புதிய செயலாளராக நியமித்துள்ளது. இவர் நவம்பர் 30-ம் தேதி பணி ஓய்வு பெறும் ஹஸ்முக் அதியாவுக்குப் பதிலாக நியமிக்கப்படுகிறார்.
  • ஓய்வு பெற்ற கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியான அசிம் குமார் ராய் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மேற்கு வங்காளத்தின் லோக் ஆயுக்தாவாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2006 முதல் 2009 வரையிலான காலத்தில் பணியாற்றிய சமரேஷ் பானர்ஜிக்கு அடுத்ததாக அம்மாநிலத்தின் 2வது லோக் ஆயுக்தாவாக பதவியேற்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்