TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 22 , 2018 2199 days 629 0
  • 2018 ஆம் ஆண்டிற்கான வார்த்தையாக ‘Toxic’ எனும் அடைமொழிச் சொல்லை ஆக்ஸ்போர்டு அகராதி அறிவித்துள்ளது. இந்த அடைமொழிச் சொல்லானது ‘நச்சுத்தன்மை’ என்ற பொருளில் வரையறை செய்யப் பட்டிருக்கின்றது. இந்த சொல்லின் அதிகபட்ச பயன்பாடானது அதன் தேர்ந்தெடுப்பிற்கு வழி வகுத்துள்ளது.
    • 2017-ல் ‘Youthquake’ என்ற சொல்லும் 2016-ல் ‘Post-truth’ என்ற சொல்லும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.
  • வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டிணைவு குறித்த 2 நாள் நடைபெறும் இந்திய-கிர்கிஸ்தான் அரசுகளுக்கிடையேயான ஆணையத்தின் 9வது அமர்வு புதுடெல்லியில் நடைபெற்று முடிந்தது.
    • 10-வது அமர்வானது கிர்கிஸ்தான் குடியரசின் பிஷ்கெக் நகரில் நடைபெறும்.
  • நிர்பயா நிதியின் கீழ் மத்திய அரசானது கீழ்க்காணும் 3 முன்மொழிதல்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
    • சட்ட அமைச்சகத்தின் முன்மொழிதலான 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தல்.
    • உள்துறை அமைச்சகத்தின் முன்மொழிதலான பாலியல் தாக்குதல் வழக்குகளுக்கான தடயவியல் கருவிகள் கொள்முதல்.
    • கொங்கன் ரயில்வே கழகத்தின் முன்மொழிதலான 50 இரயில்வே நிலையங்களில் வீடியோ கண்காணிப்பு அமைப்புகளை அமைத்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்