TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 10 , 2017 2492 days 926 0
  • பழைய பல்லாவரம் பகுதியில் களிமண்ணால் செய்யப்பட்ட 6 அடி உயரம் உடைய புதையுண்ட முதுமக்கள் தாழி மற்றும் பானை ஓடுகளின் துண்டுகள் அகழாய்வில் கிடைத்துள்ளன. இவை 2000 வருடங்களுக்கு முந்தைய காலத்திற்குட்பட்ட தொல் பொருட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளன. முதுமக்கள் தாழியைப் பயன்படுத்தி  இறந்த மக்களை பெரும் மட்பானைகளில் புதைப்பது தமிழகத்தின் பண்டைய பழக்க வழக்கமாகும்.
  • உலகின் மிகப்பெரிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (Free Trade Agreement) உருவாக்குவதற்கான தடையற்ற வர்த்தக உடன்படிக்கை மீதான பேச்சுவார்த்தையை ஐரோப்பிய யூனியனும், ஜப்பானும் இறுதி செய்துள்ளன. இவ்வொப்பந்தத்தின் மூலம் ஐரோப்பிய யூனியன் ஜப்பானிய கார்களின் மேல் 10% வரிகளை குறைக்கும். மேலும் பொதுவாக அனைத்து கார் பாகங்களின் மீதும்  3% வரியிடப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்