மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவின் புத்தாக்க நிறுவன ஆணையமானது புது தில்லியில் தொடங்கப்பட்டது. நாடெங்கிலும் உள்ள அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும் புத்தாக்க கலாச்சாரத்தை முறையாக வளர்ப்பதற்காக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவில் இந்த ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. (AICTE - All India Council for Technical Education)
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP - United Nations Environment Programme) நிர்வாக இயக்குநராக இருந்த எரிக் சொல்ஹெய்ம் பதவி விலகியதையடுத்து, UNEP-ன் தற்காலிக நிர்வாக இயக்குநராக தன்சானியா நாட்டைச் சேர்ந்த ஜாய்சி முசியா நியமிக்கப்பட்டுள்ளார்.
உள் தணிக்கை அறிக்கையின்படி UNEP-ல் இவர் விதிமுறை மீறியுள்ளது குறித்து எழுந்த குற்றச்சாட்டை அடுத்து சொல்ஹெய்ம் பதவி விலகியுள்ளார்.
புகழ்பெற்ற முதல் தர கிரிக்கெட் வீரரான வாசிம் ஜாபர் ரஞ்சி கோப்பையில் 11,000 ரன்களை அடைந்த முதலாவது இந்திய வீரராக உருவெடுத்துள்ளார். இவர் நாக்பூரில் பரோடாவுக்கு எதிராக நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டத்தில் இச்சாதனையை நிகழ்த்தினார்.