மகாராஷ்டிராவின் மருத்துவக் கல்வி அமைச்சகமானது டாக்டர் ஜகன்நாத் தீக்சித்தை உடல் பருமன் எதிர்ப்புப் பிரச்சாரத்தின் விளம்பரத் தூதுவராக நியமித்துள்ளது.
சப்ரோடோ கோப்பை சர்வதேச கால்பந்து போட்டியின் (இளையோர் சிறுவர் பிரிவு) 59வது பதிப்பில் ஆப்கானிஸ்தானின் அமினி பள்ளியைத் தோற்கடித்து வங்காள தேசத்தின் க்ரிதா சிக்சா புரோதிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
BFR ராக்கெட்டின் பெயரை ஸ்டார்ஷிப் என மாற்றுவதாக ஸ்பேஸ் X நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலன் மஸ்க் அறிவித்துள்ளார். BFR என்பது பெரிய ஃபால்கன் ராக்கெட் (Big Falcon Rocket) என்பதன் சுருக்கமாகும்.
டெல்லி பல்கலைக்கழகம், அயர்லாந்தின் டப்ளின் கல்லூரி பல்கலைக்கழகம் மற்றும் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (UK) ஆகியவற்றின் உயிரியலாளர்கள் வடகிழக்கு இந்தியாவின் இமய மலைப் பிராந்தியத்தில் கொம்புகளையுடைய 4 தவளையினங்களைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த உயிரியியலாளர்களின் குழுவில் இந்தியாவின் தவளை மனிதர் என அறியப்படும் S.D. பிஜுவும் உள்ளடங்குவார்.
தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA) ஆனது அதன் வரவிருக்கும் 2020 ரோவர் திட்டத்திற்கு இறங்கும் தளமாக ஜெஸெரோ பள்ளத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த ரோவர் திட்டமானது 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் போலந்து ஆகிய நாடுகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தங்களது குடியேற்ற கொள்கைகளை வலுவற்றதாக மாற்றும் எனக் கருதி ஐ.நா.வின் புலம்பெயர்வு உடன்படிக்கையில் (UN pact on migration) கையெழுத்திட மறுத்துவிட்டன.
அமெரிக்காவின் உலகளாவிய சமூக ஆஸ்காரிடமிருந்து இந்திய அரசியலின் வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற விருதினை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுள்ளார். இவர் வளர்ந்து வரும் இந்திய அரசியல்வாதி என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டார்.
சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் ‘தமிழ்நாடு காவல்துறையின் வீரத்தியாகிகள்’ என்ற புத்தகத்தை தமிழக முதல்வர் வெளியிட்டார். இந்தப் புத்தகமானது பணியில் இருக்கும்போது உயிர் தியாகம் செய்த காவல்துறை அதிகாரிகளை கௌரவிக்கிறது.