இங்கிலாந்தின் கேம்ப்ட்ரிஜ் அகராதியானது கைபேசியிலிருந்து பிரிக்கப்பட்டதால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் கவலையை விவரிக்கும் சொல்லான நொமோபோபியா (nomophobia) எனும் சொல்லை 2018 ஆம் ஆண்டிற்கான மக்களின் வார்த்தையாக அறிவித்துள்ளது.
முதல்முறையாக 2018-க்கான சிறந்த வார்த்தையை தெரிவு செய்வதற்காக வாக்களிக்குமாறு கேம்ப்ரிட்ஜ் ஆசிரியர்கள் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டனர்.
ஐக்கிய நாடுகளின் சபையானது ‘பல்கலைக்கழக நகர’ (University City) பிரிவில் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய நீடித்த நகரங்கள் முன்முயற்சியில் பங்கேற்பதற்காக புதுடெல்லிக்கு அருகில் உள்ள உத்திரப் பிரதேசத்தின் கவுதம புத்த நகர் மாவட்டத்தின் இரட்டை நகரங்களான நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய நகரங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்தியாவில் இருந்து இவை இரண்டு மட்டுமே அழைக்கப்பட்டுள்ளன.