TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 6 , 2018 2185 days 650 0
  • இந்திய விமானப் படை மற்றும் அமெரிக்க விமானப் படை ஆகியவற்றிற்கிடையேயான 12 நாட்கள் நடைபெறும் இராணுவப் பயிற்சியானது மேற்கு வங்காளத்தில் கலைக்குண்டா மற்றும் பனகார்க் ஆகிய விமானத் தளங்களில் தொடங்கியது. இதன் நோக்கம் இருநாடுகளுக்கிடையே செயல்முறைசார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதாகும்.
    • இந்த “எக்ஸ் கோப் இந்தியா - 2018” என்பது இந்திய விமானப் படை மற்றும் அமெரிக்க விமானப் படை ஆகிய இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் பயிற்சித் தொடரின் 4-வது பதிப்பாகும். இப்பயிற்சியானது முதன்முறையாக இரண்டு விமானப் படை தளங்களிலும் நடைபெறுகிறது.
  • இயற்கை எரிவாயு உற்பத்தியில் தனது கவனத்தை செலுத்துவதற்காக பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து (OPEC - Organization of the Petroleum Exporting Countries) விலகுவதாக கத்தார் அறிவித்துள்ளது. 1961 ஆம் ஆண்டு முதல் கத்தார் OPEC-ல் உறுப்பினராக உள்ளது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான போர்ப்ஸ் இந்தியாவின் இந்தியப் பணக்கார பிரபலங்களின் தரவரிசையில் 52 வயதுடைய நடிகரான சல்மான் கான் முதலிடத்தில் உள்ளார். இவருடைய வருமானம் 253.25 கோடி ஆகும். இந்த தரவரிசைப் பட்டியலில் இவர் மூன்றாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
    • இவருக்கு அடுத்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடத்திலும் அக்சய் குமார் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
  • பாகிஸ்தான் அரசு மிக விரைவில் சிகரெட்கள் மற்றும் சர்க்கரை பானங்கள் ஆகியவற்றின் மீது “பாவ வரி”யை (Sin Tax) விதிக்கவிருக்கிறது. இந்த பாவ வரியின் மூலம் கிடைக்கும் நிதியானது சுகாதாரப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படவிருக்கிறது.
    • “பாவ வரி” (Sin Tax) என்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சொற்கூறாகும். இது குறிப்பாக சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய குறிப்பிட்ட பொருட்களின் மீது விதிக்கப்படுகிறது. உதாரணம் : புகையிலை, மிட்டாய் வகைகள், குளிர் பானங்கள், துரித உணவுகள், காபி மற்றும் சர்க்கரை.
  • இந்தியாவின் மூத்த (107 வயது) யூடியூப் கலைஞரான கரே மஸ்தானம்மா குண்டூர் மாவட்டத்தின் தெனாலிக்கு அருகில் தன்னுடைய சொந்த கிராமமான குடிவாடாவில் காலமானார். இவரது சமையல் யூடியூப் சேனலான “கண்டரி புட்ஸ்”-ற்கு மொத்தம் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
  • கர்நாடக அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் கல்லூரிகளில் பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டம் ஆகியவற்றைப் பயிலும் பெண் குழந்தைகளுக்கான கல்விச் செலவை தாமே ஏற்றுக் கொள்ள கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  • மெக்சிகோவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஆண்டிரிஸ் மேனுவல் லோப்ஸ் ஒப்ரோடோர் (AMLO) வெற்றி பெற்று 5 மாதத்திற்குப் பின் அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்