TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 7 , 2018 2052 days 572 0
  • நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது ஹஸ்முக் அதியாவின் ஓய்வையடுத்து செலவினங்களுக்கான செயலாளரான அஜய் நாராயன் ஜாவை நிதியமைச்சகத்தின் புதிய செயலாளராக நியமித்துள்ளது.
  • அரசால் நடத்தப்படும் திரைப்பட பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கும் அமைப்பான இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகமானது (National Film Archive of India) 2200 குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை 16 மி.மீ வடிவில் அதன் தொகுப்பில் சேர்த்துள்ளது.
    • இந்த பிரதிகள் புனேவில் உள்ள மஹாராஷ்டிரா மாநில ஒலி - காட்சி கல்வியியல் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டன.
  • ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அனைத்து வகையான புற்றுநோய்களிலும் பொதுவாக காணப்படக்கூடிய தனித்தன்மையான DNA நானோ கட்டமைப்பின் அடிப்படையில் உடலில் கட்டிகள் இருப்பதை அடையாளம் காணக்கூடிய புதிய நோய் அறியும் சோதனையை உருவாக்கியுள்ளனர்.
  • மெக்ஸிகோ நகரின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மேயரான கிளாடியா ஷெயின்பாம் ஆறு ஆண்டு காலத்திற்குப் பதவியேற்றுள்ளார்.
    • இதற்கு முன்னதாக மெக்ஸிகோ நகரத்தின் இடைக்கால மேயராக (1999-2000) ரொஸாரியோ ரோபெல்ஸ் என்ற பெண்மணி நியமிக்கப்பட்டார். ஆனால் ஷெயின்பாம் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியாவார்.
  • மொரீஷியஸ் நாட்டை அடிப்படையாகக் கொண்ட SBM குழுமமானது, முழு உரிமையுடைய துணை நிறுவன அமைப்பு முறையில் நாட்டில் செயல்படுவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
    • 2013-ல் உள்நாட்டு இணைப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இத்தகைய உரிமத்தைப் பெறும் முதல் வெளிநாட்டு வங்கி இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்