1936 ஆம் ஆண்டு ஜோகனஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான கிளாரி க்ரிமெட் 36 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்திருந்தார். இச்சாதனையினை பாகிஸ்தானின் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான யாசிர்ஷா முறியடித்துள்ளார்.
அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து வீரரான வில் சோமர்வில்லேவின் விக்கெட்டை எடுத்ததன் மூலமாக ‘மிக விரைவாக 200 டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்டுகளை எடுத்த வீரர்’ என்ற சாதனையினை யாசிர்ஷா படைத்துள்ளார்.
தனியார் துறை வங்கியான ICICI-க்கான அரசு தரப்பு நியமனதாரராக 1995 ஆம் ஆண்டின் இந்திய பொருளாதாரப் பணி அலுவலரான (Indian Economic Service) லலித் குமாரை அரசு நியமித்துள்ளது.
இவர் லோக் ரஞ்சனையடுத்து பதவியேற்றுள்ளார்.
முதல் இந்தியா-ஆசியான் இன்னோடெக் உச்சி மாநாடு புதுடெல்லியில் நடத்தப் பட்டது. இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST - Department of Science & Technology) மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பால் (FICCI - Federation of Indian Chambers of Commerce & Industry) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.