TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 9 , 2018 2182 days 619 0
  • புதுடெல்லியின் ஜன்பாத்தில் உள்ள தேசிய அருங்காட்சியக அரங்கத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகியவற்றிற்கிடையேயான கலாச்சார மற்றும் பண்பாட்டுப் பாதுகாப்பிற்கான கூட்டிணைவின் இரண்டு நாள் மாநாடு நடத்தப் பட்டது.
  • 2001-2010 வரையிலான இந்தியக் கடற்படையின் வரலாற்றைக் கூறும் ‘நீலக்கடல் புரட்சி’ எனும் நூலை கடற்படைத் தலைமை அதிகாரியான அட்மிரல் சுனில் லாம்பா புதுடெல்லியில் வெளியிட்டார். இந்த புத்தகமானது துணை அட்மிரலான அனூப் சிங்கால் எழுதப்பட்டது.
    • இந்த புத்தகமானது கடற்படை வரலாற்றைக் கூறும் 6-வது தொகுதியாகும். முதல் 5 பாகங்கள் 1945 முதல் 2000 வரையிலான காலகட்டத்தை விளக்குகின்றன.
  • ‘ஒரு டெல்லி ஒரு அட்டை’ என்ற வாசகத்துடன் எளிதாக பயணம் செய்வதற்காக டெல்லி அரசானது ஒன் (ONE) என்ற பொதுவான போக்குவரத்து அட்டையை அறிவித்துள்ளது. இந்த அட்டையானது நகரத்தின் போக்குவரத்து சேவை வழங்குநர்களான DMRC (Delhi Metro Rail Corporation), DTC (Delhi Transport Corporation) மற்றும் டெல்லி அரசு ஆகிய மூன்றின் இலட்சினைகளையும் கொண்டுள்ளது.
  • மாணவர்கள் மற்றும் பதின்ம பருவத்தினரிடையே இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இணைய பாதுகாப்பு குறித்த மாணவர்களுக்கான கையேடு (A Handbook for Students on Cyber Safety) என்ற தலைப்பிலான ஆங்கிலப் புத்தகமொன்றை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவரான ஸ்வப்னா பர்மானை தனது டிஜிட்டல் செயலியான யோனோவின் (You only need one-Yono) விளம்பரத் தூதுவராக பாரத ஸ்டேட் வங்கி நியமித்துள்ளது.
  • ஜோன் ரிட்ஜியோனை தனது புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்ததை மொனாக்கோவில் நடைபெற்ற IAAF (International Association of Athletics Federations) எனப்படும் சர்வதேச தடகள விளையாட்டுக்கான கூட்டமைப்புச் சங்கத்தின் 215வது மன்றக் கூட்டத்தின் முதல் நாளில் IAAF கவுன்சில் ஒப்புதல் அளித்த பின்னர் IAAF அந்நியமனத்தை அறிவித்துள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்