சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக் கூட்டமைப்பின் (International Shooting Sports Federation-ISSF) நடுவர்கள் குழுவின் 7 உறுப்பினர்களில் ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியராக பவன் சிங் உருவெடுத்துள்ளார். இந்த நடுவர்கள் குழுவில் ஒரு தலைவர் மற்றும் 7 உறுப்பினர்கள் இருப்பர்.
இது துப்பாக்கி சுடுதலுக்கான விதிகளின் சீரான பயன்பாட்டிற்கு பொறுப்புடையதாகும். மேலும் இது சர்வதேச நடுவர்களுக்கு வழிகாட்டுதல்களையும் வழங்குகிறது.
டெல்லியில் சீனாவின் மாஞ்சா நூலை (பட்டம் விடும் நூல்) தடை செய்ததற்காக, விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் அமைப்பு எனப்படும் பீட்டாவால் (PETA - People for the Ethical Treatment of Animals) டெல்லி அரசின் உணவு வழங்கல், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரான இம்ரான் ஹுசைனுக்கு ‘விலங்குகளுக்கான நாயகன்’ (Hero to Animals) என்ற விருது வழங்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் ஜம்முவில் உள்ள ஆசிரியர்கள் பவனில் ‘ஆயுஷ்மன் பாரத்- பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
நாகாலாந்து மாநில அரசானது நாகாலாந்தின் மின்-நிர்வாக கல்வி மையத்தை (e-Governance Academy) அமைப்பதற்கான ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்குதல் ஆகியவற்றிற்காக எஸ்டோனியாவின் மின் ஆளுமை கல்வியகத்துடன் 5 வருட புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது கோஹிமாவில் நடைபெற்ற இ-நாகா மாநாட்டின் 4-வது பதிப்பில் கையெழுத்திடப்பட்டது.
2015 ஆம் ஆண்டில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது சதத்தை விராட் கோலி அடித்த பின் அவர் கையொப்பமிட்டு வழங்கிய மேலாடையானது (ஜெர்சி) ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பௌரால் நகரில் பிராட்மேன் அருங்காட்சியகத்தில் சச்சின் டெண்டுல்கரின் உருவப்படத்திற்கு அடுத்ததாக வைக்கப்பட்டுள்ளது என்ற புதிய சிறப்புக் கௌரவத்தை கோலி பெற்று இருக்கின்றார்.
அமைச்சரவை நியமனக் குழுவானது கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனை 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமனம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி இப்பதவியிலிருந்து விலகிய அரவிந்த் சுப்பிரமணியனுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.