நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக (Chairman and Managing Director - CMD) அதுல் சஹாயை நியமித்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர் ஜி. சீனிவாசனுக்கு மாற்றாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 5 ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பார்.
175-வது எண்ணெய் மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பின் (Organization of Petroleum Exporting Companies - OPEC) 2 நாள் கருத்தரங்கு மற்றும் 5-வது OPEC உறுப்பினர்கள் மற்றும் OPEC உறுப்பினர்கள் அல்லாத நாடுகளின் அமைச்சரவை நிலையிலான 1 நாள் நடைபெறும் சந்திப்பானது ஆஸ்திரியாவின் வியன்னாவில் நிறைவு பெற்றது.
அடுத்த OPEC உறுப்பினர்கள் மற்றும் OPEC உறுப்பினர்கள் அல்லாத நாடுகளின் அமைச்சரவை நிலையிலான சந்திப்பானது 2019 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடைபெறவிருக்கிறது.
3 நாள் நடைபெறும் 2018 ஆம் ஆண்டின் இராணுவ இலக்கியத் திருவிழாவானது (MLF - Military Literature Festival) பஞ்சாப், ஹரியானா மற்றும் இந்திய இராணுவம் ஆகியவற்றால் கூட்டாக இணைந்து சண்டிகரில் நடத்தப்பட்டது.
இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்ரேட்ஸ் நீதிமன்றமானது விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது.