தென் கொரியாவின் இன்சியானில் நடைபெற்ற புகழ்பெற்ற சர்வதேச மேசைப் பந்தாட்ட கூட்டமைப்பின் (ITTF - International Table Tennis Federation) நட்சத்திர விருதுகள் விழாவில் இந்தியாவின் மனிகா பத்ரா 'Breakthrough Table Tennis Star’ எனும் விருதினைப் பெற்றார்.
இதன்மூலம் அவர் இந்த விருதினைப் பெற்ற முதல் இந்திய மேசைப் பந்தாட்ட வீரர் ஆகியுள்ளார்.
சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘பெர்லின்’ நிறுவனமானது நிதி ஆயோக் உடன் இணைந்து இந்தியாவில் குறிப்பிடத்தக்க சாதகமான, சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கென AI (Artificial Intelligence) செயலிகளை மேம்படுத்துவதற்காக " AI 4 All Global Hackathon” என்ற நிகழ்வைத் தொடங்கியுள்ளது .
அடிலெய்டில் நடைபெற்ற நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததன் மூலம் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை டெஸ்ட் போட்டிகளில் தோற்கடித்த முதல் இந்திய அணித் தலைவராக விராட் கோலி ஆகியுள்ளார்.
முன்னாள் இந்திய அணித் தலைவர்களான ராகுல் டிராவிட் மற்றும் M S தோனி ஆகியோர் ஆஸ்திரேலியாவைத் தவிர இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளை டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளனர்.