நியமனங்களுக்குக்கான அமைச்சரவைக் குழுவால் இடைக்கால சிபிஐ இயக்குநரான M. நாகேஸ்வர ராவிற்கு கூடுதல் இயக்குநருக்கு இணையான பதவி உயர்வு அளிக்கப் பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் புனே மாவட்ட நீதிமன்றமானது நீதிமன்ற வைப்பு, அபராதங்கள் ஆகியவற்றை மின்னணு பண வழங்கீடு முறையில் செலுத்த அனுமதித்துள்ள முதல் நீதிமன்றமாக ஆகியுள்ளது. இந்த புதிய வசதியானது சிவாஜி நகர் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
பீட்டா இந்தியா அமைப்பால் 2018 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக சோனம் கபூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதராக அனுஷ்கா ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
தமிழில் தந்தி அனுப்பும் முறையை கண்டறிந்தவரான A. சிவலிங்கம் திருச்சியில் காலமானார். இவர் 1955-ல் தமிழில் தந்தி அனுப்பும் முறையைக் கண்டறிந்து அதனைப் பொதுப் பயன்பாட்டிற்கு 1956-ல் கொண்டு வந்தார். மேலும் இவர் தமிழ் தந்தி சிவலிங்கனார் என்றும் அழைக்கப்பட்டார்.
சென்னைப் பெரு நகராட்சியானது, சென்னை கோட்டைக்கு அருகில் உள்ள பிரேஸர் சாலையை TNPSC சாலை என பெயர் மாற்றம் செய்துள்ளது.