‘Period. End of Sentence' என்ற குறும்படமானது ஆவண குறும்பட பிரிவில் 91-வது ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையால் முதன்முதலாக வெளியிடப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான தொழில் தொடங்கும் மாநிலங்கள் தரவரிசையில் சிறப்பாக செயலாற்றும் மாநிலமாக குஜராத் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
மங்கோலியாவிற்கான அடுத்த இந்தியத் தூதுவராக மோஹிந்தர் பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஜிபுட்டி குடியரசுக்கான அடுத்த இந்தியத் தூதுவராக அசோக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
செபி (SEBI) அமைப்பின் ஊழல் கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரியாக (Chief Vigilance Officer-CVO) ஆர்த்தி சாப்ரா ஸ்ரீவஸ்தவாவை பிரதமர் அலுவலகமானது முதல் கட்டமாக மூன்று ஆண்டுகளுக்கு நியமித்துள்ளது.
CVO பணியானது அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களின் ஊழல்களைக் கண்டறிவதற்காக பணியமர்த்தப்பட்ட மத்திய ஊழல் கண்காணிப்பு துறை அமைப்பின் விரிவாக்கப்பட்ட ஒரு பிரிவாக கருதப்படுகின்றனர்.
ஹைதராபாத்தில் சம்ஷாபாத்திற்கு அருகே உள்ள அதானி ஏரோஸ்பேஸ் பூங்காவில் இந்தியாவின் ஆளில்லா விமானங்களைத் தயாரிக்கும் முதலாவது தனியார் பிரிவு திறக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “மாறும் இந்தியா” (Changing India) எனும் தலைப்பிலான தனது புத்தகத்தை முன்னாள் பிரதமரான மன்மோகன்சிங் வெளியிட்டார்.