புவனேஸ்வரில் உள்ள உட்கல் பல்கலைக்கழகத்தில் பைகா புரட்சிக்கான ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் அறிவித்துள்ளார். மேலும் இவர் பைகா புரட்சி குறித்த நாணயம் மற்றும் அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளார்.
1817 ஆம் ஆண்டு இந்தியாவின் கிழக்குப் பகுதியான ஒடிசாவில் ஏற்பட்ட இந்த புரட்சியானது பிரிட்டிஷ் ஆட்சியின் அடித்தளத்தை ஒரு குறுகிய காலத்திற்கு அசைத்துப் பார்த்தது.
ஒடிசா கடற்கரையில் இந்தியா தனது அணு ஆயுதத் திறன் கொண்ட 4000 கிலோ மீட்டர் வரை சென்று எதிரி ஏவுகணையைத் தாக்கி அழிக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான “அக்னி IV”-ஐ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இது “அக்னி IV” ஏவுகணையின் 7-வது சோதனையாகும்.
காஞ்சி மகாசுவாமி திருவிழாவின் போது தென் இந்தியக் கல்விக் கழகத்தின் (SEIS - South Indian Education Society) ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற தேசிய புகழ்பெற்ற விருதை இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெற்றார்.
பொது வெளியில் தலைமை பண்பிற்கு தனது பங்களிப்பை ஆற்றியதற்காக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
“அசாமின் பாடும் பறவை” என்றறியப்படும் தீபாளி போர்தாகூர் என்ற பாடகர் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று காலமானார். அவருக்கு வயது 77 ஆகும். இவர் 1998 ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார். மேலும் இவர் “அசோமிய லதா மங்கேஸ்கர்” என்றும் அறியப்படுகிறார்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94 வது பிறந்த நாள் விழாவில் கிராமப் புறங்களில் உள்ள மாணவர்களுக்காக ‘பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய்’ சர்வதேச பள்ளியை மகாராஷ்டிரா முதல்வர் தொடங்கி வைத்தார்.
இந்த பள்ளிகள் மகாராஷ்டிரா சர்வதேச கல்வி வாரியத்துடன் (Maharashtra International Education Board-MIEB) இணைக்கப்பட்டுள்ளன.