சட்டத்தின் விதிமுறைகளின்படி பள்ளிகளானது மாணவர்கள் சேர்க்கைக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்க கூடாது என இந்திய தனித்துவ அடையாள எண் ஆணையம் (UIDAI - Unique Identification Authority of India) தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இவ்வாறு கட்டாயமாக்குவது சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும்.
மாநில அரசால் நடத்தப்படும் குழந்தைகள் நலனிற்கான நிறுவனங்களின் பெயர்கள் ஜகன்நாத் ஆசிரம் என பெயர் மாற்றப்படுவதாக ஹரியானாவின் முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.
கணித வடிவியல் மற்றும் எண் கோட்பாடு ஆகியவற்றில் பிரம்மாண்டமான மற்றும் தொலைநோக்குடைய பங்களிப்பிற்காக யால் பல்கலைக்கழகத்தின் யிபெங்க் லியு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஜாக் தோர்ன் ஆகிய 2 பேராசிரியர்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான சாஸ்த்ரா- ராமானுஜன் விருது வழங்கப்பட்டது.
வட சென்னையில் நோயாளிகளிடமிருந்து ஆலோசனைக் கட்டணமாக வெறும் ரூ. 2 (பிறகு 5 ஆக உயர்த்தப்பட்டது) மட்டுமே பெற்றுச் சிகிச்சையளித்து வந்த மக்கள் மருத்துவர் (People's doctor) என்று அழைக்கப்படும் டாக்டர் S. ஜெயச்சந்திரன் வயது மூப்பு காரணமாக சமீபத்தில் காலமானார்.
உள்ளூர் மக்கள் இவரை 2 ரூபாய் டாக்டர் அல்லது ‘5 ரூபாய் டாக்டர்’ என அன்போடு அழைத்தனர்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாடு முழுவதும் ஸ்மார்ட் ப்ரீபெய்டு மின்சார அளவீட்டுக் கருவியை (Electricity meters) உபயோகித்தலை மத்திய ஆற்றல் அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது. இந்த மாற்றமானது அடுத்த மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Infrastructure Leasing & Financial Services Ltd (IL&FS) endra நிறுவனமானது ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான பிஜய்குமாரை அதன் துணை நிர்வாக இயக்குநராக நியமித்துள்ளது.
மேலும் இந்நிறுவனமானது N. சீனிவாசனை தனிச் சுதந்திரமுடைய இயக்குநராக நியமித்துள்ளது.