TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 29 , 2018 2162 days 647 0
  • நீதிபதி சாகரி பிரவீன் குமாரை ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தின் புதிய தற்காலிக தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். இது வரும் 2019 ஜனவரி 01 முதல் நடைமுறைக்கு வரும்.
  • பூட்டானின் 12-வது 5 ஆண்டு திட்டத்திற்காக 4500 கோடி ரூபாயை நிதி உதவியாக இந்தியப் பிரதமர் அறிவித்துள்ளார்.
  • ரஷ்யாவின் S-400 ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்பை சீனா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ரஷ்யாவுடன் S-400 ஏவுகணைகளை வாங்குவதற்காக 2014-ல் அரசிற்கும் அரசிற்கும் இடையிலான ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்ட முதல் அயல்நாட்டு வாங்கும் நபர் சீனாவாகும்.
  • தென்கிழக்கு நிலக்கரிச் சுரங்கங்கள் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகிய பொறுப்புகளை கவனிக்கும் வாய்ப்பு அம்பிகா பிரசாத் பாண்டாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • மடகாஸ்கரின் முன்னாள் அதிபராக பதவி வகித்த மார்க் ராவலோமனானாவைத் தோற்கடித்து முன்னாள் தலைவரான ஆண்ட்ரி ராஜோலினா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
  • ஒரு துரிதமான வாக்கெடுப்பின்படி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான பராக் ஒபாமா தொடர்ந்து 11-வது ஆண்டாக அமெரிக்கர்களால் அதிகம் விரும்பப்படும் நபராக இடம் பிடித்துள்ளார். தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து 4-வது ஆண்டாக 2-வது இடத்தில் உள்ளார்.
    • முன்னாள் முதல் அமெரிக்க குடிமகளான மிச்செல் ஒபாமாவும் மிகவும் விரும்பப்படும் பெண்மணியாக அமெரிக்கர்களால் வாக்களிக்கப்பட்டுள்ளார்.
  • டீலாஜிக் என்ற நிறுவனத்தின் தரவுகளின் படி, இந்தியாவானது கடந்த இருபது ஆண்டுகளில் முதன்முறையாக அண்டை நாடான சீனாவை விட அதிக அளவு வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுள்ளது.
  • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமானது மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ஐ திருத்தம் செய்து உயர் பாதுகாப்புப் பதிவு எண் பலகையை (High Security Registration Plates-HSRP) 2019 ஏப்ரல் 1 முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாக்கியுள்ளது.
  • பஞ்சாப் பிரிவினைக்கு ஆதரவான வன்முறைப் பிரச்சாரத்தின் போது நடைபெற்ற பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டமைக்காக காலிஸ்தான் விடுதலைப் படையை (Khalistan Liberation Force-KLF) சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act- UAPA) கீழ் அரசு தடை செய்துள்ளது
    • UAPA சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட 40வது அமைப்பாக KLF உள்ளது.
  • நடிகரும் நாடகக் கலைஞருமான சீனு மோகன் சமீபத்தில் சென்னையில் காலமானார். இவர் 1979ல் நிறுவப்பட்ட கிரேஸி நாடகக் குழுவின் ஆரம்பக் காலத்திலிருந்தே அதன் உறுப்பினர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்