திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 42-வது தேசிய அமைப்புகள் கருத்தரங்கின்போது இஸ்ரோவின் தலைவர் சிவனுக்கு தேசிய அமைப்புகள் தங்க விருதானது இந்திய அமைப்புகள் சமூகத்தினால் (SSI - Systems Society of India) வழங்கப்பட்டது.
இந்த விருதானது அமைப்பு அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் இவரது தலைசிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கிறது.
இஸ்ரோ நிறுவனம் மாணவர்களுடன் இணைந்து, தனது திட்டமான அனைவரையும் சென்றடையக் கூடிய திட்டத்தின் ஒரு பகுதியாக “சம்வாத்” என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டமானது நாடெங்கிலும் உள்ள இளைஞர்களை விண்வெளி அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்துகிறது.
ஹைதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவரான பி.வி.ஆர். மோகன் தலைமையிலான குழுவானது 2020 ஆம் ஆண்டிலிருந்து புதிய கல்லூரிகளை அமைக்க அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (AICTE - All India Council for Technical Education) அனுமதிக்கக் கூடாது என்று பரிந்துரைத்துள்ளது.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி (தனிப் பொறுப்பு) நடுத்தர வருவாய் ஈட்டும் பிரிவினருக்கான பிரதான் மந்திரி ஆவாஸ் திட்டம் என்ற PMAY (Pradhan Mantri Awas Yojana) கடன் மானியத்தை 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
ரஃபேல் வரானே மற்றும் அண்ட்டோய்னி கிரீஸ்பேன் ஆகியோரை வீழ்த்தியதன் மூலம், 2018 ஆம் ஆண்டிற்கான பிரெஞ்சு விளையாட்டு வீரர் என்ற பட்டத்தை வளர்ந்து வரும் நட்சத்திர கால்பந்து வீரரான இலியன் பாபி வென்றுள்ளார்.
மத்திய ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்தியாவிலிருந்து செய்யப்படவுள்ள முதலீடுகளின் பின்னணியில் உஸ்பெக்கிஸ்தான் நாடானது 2019 ஆம் ஆண்டை “நடப்பு முதலீடு மற்றும் சமூக வளர்ச்சிக்கான” ஆண்டாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கிருஷ்ணனை நியமித்தார். இவர் பதவியேற்றதிலிருந்து (ஜனவரி 1, 2019) மூன்று ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார்.
1988 ஆம் அண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அணு ஆயுதங்கள் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொண்டன.
இது இரு நாடுகளுக்கு இடையேயான 28-வது முறை நிகழ்ந்த தகவல் பரிமாற்றமாகும். முதன்முறையாக 1992 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி இருநாடுகளுக்கும் இடையே தகவல் பரிமாறப்பட்டது.