அனைத்து மல்கானாக்களையும் டிஜிட்டல் வடிவில் மாற்றியுள்ள முதல் காவல் துறையாக டெல்லி காவல் துறை ஆகியுள்ளது. மல்கானா என்பது வழக்கு சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்றும் ஆதாரங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காக காவல் நிலையங்களில் உள்ள சேமிப்பு வசதியாகும்.
தேசிய மனித உரிமைகள் ஆணையமானது பொதுச் சேவை மையங்கள் மூலமாக புகார்களைப் பதிவு செய்வதற்காக 14433 எனும் இலவச தொலைபேசி எண்ணைத் தொடங்கியுள்ளது. இந்த இலவச எண்ணானது ஆணையத்தின் அலுவல் நேரங்களில் மட்டுமே உபயோகப்படுத்த முடியும்.
இந்திய அணியின் தலைவர் விராட் கோலி வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அணித் தலைவராக இருந்து 11 முறை வெற்றி பெற்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சவுரவ் கங்குலியின் சாதனையினைச் சமன் செய்துள்ளார். மேலும் இவர் ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர்-கவாஸ்கர் டிராபியைத் தக்க வைத்துக் கொண்ட முதல் இந்திய அணித் தலைவருமாவார்.
அரசுக்குச் சொந்தமான அலகாபாத் வங்கி மற்றும் SBI ஆயுள் காப்பீடு ஆகியவை இணைந்து அலகாபாத் வங்கியின் 3238 கிளைகள் மூலமாக காப்பீடுகளை விற்க உள்ளன. இந்த ஒப்பந்தமானது நாட்டின் மிகப்பெரிய ஒரு காப்பீட்டு சேவை கூட்டிணைவாக கருதப்படுகிறது.
சச்சின் டெண்டுல்கருக்குப் பயிற்சியளித்தவரும் 1990 ஆண்டின் துரோணாச்சார்யா விருது பெற்றவருமான பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேகர் தனது 86 வயதில் காலமானார்.
கிரிக்கெட் விளையாட்டில் இவரின் பங்களிப்பிற்காக 2010 ஆம் ஆண்டு இவர் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
விராட் கோலி சர்வதேச ஆட்டத்தில் வேகமாக 19,000 ரன்களை எடுத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முடியடித்துள்ளார்.
வெப்ப மண்டல சூறாவளியான உஸ்மான் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் உள்ள பிகோல் பிராந்தியத்தைத் தாக்கியது. இது கடுமையான மழைப் பொழிவுடன் நாடு முழுவதும் பல இடங்களில் மோசமான நிலச்சரிவுக்கும் காரணமாகியுள்ளது.
பெண்டகன் தனிக்கையாளரான டேவிட் நார்குயுஸ்ட் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைக்கான தற்காலிக துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.