TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 5 , 2019 2155 days 666 0
  • இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC – Indian Oil Corporation) ஆனது தமிழ்நாட்டின் எண்ணூரில் உள்ள அதன் ரூ 515 கோடி மதிப்புடைய முதல் திரவ இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதி முனையத்தின் செயல்பாட்டினை அறிவித்துள்ளது.
    • இந்த LNG இறக்குமதி முனையமானது IOC ஆல் சொந்தமாகக் கட்டப்பட்ட முதல் இறக்குமதி முனையமாகும்.
  • குஜராத் கல்வி வாரியமானது குஜராத்தின் அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு தேச பக்தியை வளர்ப்பதற்காக வகுப்புகளில் தங்கள் வருகைப் பதிவு அழைப்புகளுக்கு ‘உள்ளேன் அய்யா’ எனக் கூறுவதற்குப் பதிலாக ‘ஜெய்ஹிந்த்’ அல்லது ‘ஜெய்பாரத்’ எனக் கூற வேண்டுமென சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
  • விஜலாபுரம் கிராமத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான குப்பம் விமான நிலைய ஓடுபாதைத் திட்டத்திற்கு ஆந்திர முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
  • ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 100 ரன்களை குவித்த முதல் விக்கெட் கீப்பர் மட்டையாளராக இந்தியாவின் ரிஷப் பந்த் உருவெடுத்துள்ளார்.
  • நீதிபதி ஆசிப் சாயித் கோசா பாகிஸ்தானின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போதுள்ள தலைமை நீதிபதியான சாகிப் நிசார் என்பவருக்கு அடுத்துப் பதவியேற்கவுள்ளார்.
  • தமிழ்நாடு அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கழகத்தின் துணைத் தலைவராக மயில்சாமி அண்ணாதுரையை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
  • தில்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையமானது அதி நவீன ஆயுதங்களுடன் கூடிய 6 குண்டு துளைக்காத வாகனங்களைப் பெற உள்ள முதல் விமான நிலையமாக மாற உள்ளது.
  • கோயம்புத்தூர் விழாவின் 11-வது பதிப்பானது ஜனவரி 03 அன்று கோயம்புத்தூர் வஉசி பூங்காவில் தொடங்கியது. ஒரு வாரக் காலத்திற்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியானது இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் யங் இந்தியன் (YI – Young Indian) ஆகியவற்றால் நடத்தப்படுகிறது. இது ஜனவரி 12 வரை நடைபெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்