TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 8 , 2019 2020 days 595 0
  • வடக்கு மத்திய ரயில்வேயானது பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளாவில் பங்கேற்பவர்களுக்கு உதவுவதற்காக Rail Kumbh Seva எனும் கைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • தமிழக ஆளுநர் தனது தமிழக சட்டசபை உரையில் தமிழக அரசானது அனைத்து குடும்ப அட்டை வைத்திருப்போருக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாயையும் ஒரு பரிசுக் கூடையையும் வழங்கும் என அறிவித்துள்ளார்.
  • சர்வதேச வேட்டி தினமானது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 2019 ஜனவரி 6 ஆம் நாள் கொண்டாடப்பட்டது.
  • 9 நாட்கள் நடைபெறும் சர்வதேச பட்டம் விடும் திருவிழா ஜனவரி 6ஆம் தேதியன்று குஜராத்தின் அகமதாபாத்தில் தொடங்கியது. அகமதாபாத் நகரமானது 1989 ஆம் ஆண்டிலிருந்து அதன் உத்தரயான் திருவிழாவின் அதிகாரப் பூர்வ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை நடத்தி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்