TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 9 , 2019 2019 days 582 0
  • தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜனவரி 04 முதல் 20 வரை நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சியின் 42-வது பதிப்பானது சென்னையின் நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் தொடங்கியது.
  • எகிப்து நாடானது அதன் தலைநகரான கெய்ரோவிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள புதிய நிர்வாக தலைநகரத்தில் மேற்கு ஆசியாவின் மிகப் பெரிய பேராலயத்தினை சமீபத்தில் திறந்துள்ளது.
  • அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பொது உடைமைக் கோட்பாட்டுடன் இஸ்லாமியத்தை இணக்கமாக்கும் முயற்சியில் பீஜிங் ஆனது சீன மயமாக்க நடவடிக்கையை செயல்படுத்த புதிய சட்டத்தை இயற்றியுள்ளது.
  • விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புத் தலைவர் மற்றும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ராஜேஷ் சந்திரா சாஸ்திரா சீமா பால் (SSB - Sashastra Seema Bal) என்பதன் பொது இயக்குநராக 2021 டிசம்பர் 31 வரை 2 ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இவர் இந்தோ - திபெத் எல்லைத் தலைவரான SS தேஸ்வாலுக்கு அடுத்ததாக பதவியேற்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்