முதல் தர கிரிக்கெட்டில் 40 வயதைக் கடந்த பிறகு இரண்டு இரட்டைச் சதங்களை அடித்த முதல் இந்திய மற்றும் முதல் ஆசிய மட்டை வீரராக ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த நபரான வாசிம் ஜாபர் சாதனை படைத்திருக்கின்றார்.
இந்திய குடியரசுத் தலைவர் சமீபத்தில் நீதிபதி லிங்கப்ப நாராயண சுவாமியை கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தலைமை நீதிபதியாக நியமித்திருக்கின்றார்.
பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஆரிப் அல்வி பாகிஸ்தானின் 26-வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி ஆசிப் சயீத் கோஷாவிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இவர் தனது தீர்ப்புகளில் இலக்கியப் படைப்புகளைச் சுட்டிக் காட்டும் தனது பழக்கத்தால் கவிதை நீதிபதி என்று அறியப்படுகின்றார்.
பணியாளர் மற்றும் பயிற்சித் துறையானது (The Department of Personnel & Training - DoPT) தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC - National Human Rights Commission) இயக்குநர் ஜெனரல் (விசாரணை) பதவியில் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான பிரபாத் சிங்கை நியமித்திருக்கின்றது.
சத்தீஸ்கர் மாநில தேர்தல் ஆணையம் தனது தேர்தல் அதிகாரிகளை கண்காணிப்பதற்காக ஒரு செயலியை புதுதில்லியில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டில் உருவாக்கியிருக்கின்றது. இந்த செயலி தேர்தல் சமயத்தின் போது பணியாளர் மேலாண்மையை சீர்படுத்திடச் செய்யும். இச்செயலியானது தேர்தலின்போது பணியாளர் மேலாண்மையை சீர்படுத்துகிறது.
இதனிடையே மத்தியப் பிரதேச மாநில தேர்தல் ஆணையம் மாற்றுத் திறனாளி நபர்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் வரிசையில் நிற்காமல் வாக்களிக்கும் அனுபவத்தை உறுதி செய்வதற்காக தனது தேர்தல் அலுவலகத்தால் மேம்படுத்தப்பட்ட ஒரு செயலியைக் காண்பித்தது.