நாடெங்கிலும் உள்ள மிகவும் ஏழ்மையிலும் ஏழ்மையானவர்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு DAY-NULM திட்டத்தின் விரிவாக்கத்தை நீட்டிப்பதற்காக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகமானது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நடைபெறும் சஹரி சம்ரித் உத்சவ் எனும் பெயரிடப்பட்ட நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
தீனதயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம் (Deendayal Antyodaya Yojana – National Urban Livelihoods Mission- DAY-NULM)
2022 ஆம் ஆண்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முன்னர் இருமுறை விண்வெளி சோதனைகளை நடத்துவதற்காக இரண்டு முறை மனிதர்களை ஒத்த ரோபோக்களை ISRO பயன்படுத்த உள்ளது.
ககன்யான் திட்டத்திற்காக எந்தவொரு விலங்குகளையும் சோதனை அமைப்புகளில் பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை.
லெபனான் நாட்டு தலைநகரான பெய்ருட்டில் அரபு பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த பொருளதார மாநாடானது மார்ச் மாதம் துனிசியாவில் நடைபெறவிருக்கும் உண்மையான அரபு லீக் மாநாட்டிற்கு முன்னோடியாகும்.
உலகின் மிக வயதான மனிதரான ஜப்பானின் மசாஸோ நோனாகா தனது 113-வது வயதில் காலமானார். இவர் ஏப்ரல் 2018-ல் உலகிலேயே மிகவும் வயதான ஆணாக கின்னஸ் உலக சாதனையால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நெதர்லாந்தின் அரான்ட்க்ஸா ரஸ்ஸைத் தோற்கடித்து இந்தியாவின் அங்கிதா ரெய்னா சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் மகளிர் போட்டித் தொடரை 25000 $ பரிசுடன் வென்றார்.
மகாராஷ்டிராவின் நாசிக் ஆனது தமிழ்நாட்டின் கோயம்புத்தூருக்கு அடுத்ததாக நாட்டின் இரண்டாவது பாதுகாப்புப் புத்தாக்க மையமாக இருக்கும் என மத்திய பாதுகாப்பு இணையமைச்சர் சுபாஷ் பம்ரே அறிவித்துள்ளார்.
இது 2025 ஆம் ஆண்டில் உலகின் முன்னணி 5 ஆயத ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக நாட்டை உருவாக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தின் இலக்கை அடையும் நடவடிக்கையில் ஒன்றாகும்.
இந்திய தேசிய பங்குச்சந்தை நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து அசோக் சால்வா 2019 ஜனவரி 12 அன்று பதவி விலகினார்.
குருகிராமைச் சேர்ந்த 8 வயதான கார்த்திக் சிங் அமெரிக்க குழந்தைகள் கோல்ப் ஆல் ஏற்பாடு செய்யப்பட்டு மலேசியாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான உலக கோல்ப் சாம்பியன்ஷிப்பில் 8 வயதிற்குட்பட்டோர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். இதனால் உலகப் பட்டத்தினை வென்ற இள வயது இந்தியராக அவர் மாறியுள்ளார்.
பெங்களூருவின் காந்தீரவா உள்ளரங்கு மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை ராக்கெட்ஸ்-ஐ வீழ்த்தி பெங்களூருவின் ராப்டர்ஸ் தங்கள் முதல் பிரீமியர் பேட்மிட்டன் லீக் பட்டத்தை வென்றது.