TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 30 , 2019 1998 days 586 0
  • இந்தியாவில் உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலான “ரயில் 18” ஆனது “வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்” எனப் பெயரிடப்பட்டு டெல்லி மற்றும் வாரனாசிக்கு இடையே இயக்கப்படுகிறது. “ரயில் 18” ஆனது இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் சென்னையின் ஐ.சி.எப்-இல் உருவாக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த இரயிலாகும்.
  • நேபாளத்தின் ரோஷித் பவுடேல் சச்சினின் சாதனையை (16 வருடம் மற்றும் 213 நாட்கள்) முறியடித்து இளம் வயதில் ஐம்பது ரன்களை கடந்த முதல் வீரராக (16 வருடம் மற்றும் 146 நாட்கள்) ஆகியுள்ளார்.
  • உலக சுகாதார அமைப்பின் (WHO – World Health Organization) தென்கிழக்கு ஆசியாவின் பிராந்தியத் தலைவராக டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் இரண்டாவது ஐந்து ஆண்டு காலத்திற்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இவர் WHO-ன் தென்கிழக்காசிய பிராந்தியத்திற்குத் தலைவரான முதல் பெண்மணி ஆவார்.
  • IRCTC-யின் இரயில்களின் தூய்மைத் தன்மை ஆய்வின்படி, தெற்கு இரயில்வேயானது நாட்டின் தூய்மையான இரயில் நிலையங்களில் முதலிடம் வகிக்கின்றது.
    • தூரந்தோ ரயில்களானது உயர் மதிப்புடைய ரயில்களில் குறைந்த தூய்மையுடன் உள்ளன. அதே வேளையில் தேஜாஸ் மற்றும் சதாப்தி ஆகிய இரயில்கள் மிகவும் தூய்மையானதாக உள்ளன.
  • ஆண்ட்ரி மேகின் எழுதிய லா வி டி’உன் ஹோம் இன்கோன்னு (Andrei Makine’s “La vie d’un homme inconnu” - தெரியாத மனிதனின் வாழ்க்கை) எனும் புத்தகத்தின் மொழிபெயர்ப்பானது இலக்கிய மொழிபெயர்ப்பிற்காக ரோமைன் ரோலண்ட் புத்தகப் பரிசினை வென்றுள்ளது.
    • இந்த புத்தகமானது R. கிச்சின மூர்த்தியால் மொழிபெயர்க்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்