இந்தியாவின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இணைந்து அமராவதியில் நீதிமன்ற வளாகத்தைத் திறந்து வைத்தனர்.
இந்த நீதிமன்ற வளாகம் ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்திற்கான இடைக்கால உயர்நீதிமன்றத்தைக் கொண்டிருக்கும்.
சிறைச்சாலை வடிவமைப்பிற்கான முதலாவது தேசிய மாநாடு ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்டது.
பாரம்பரியக் கலைகளை இளைய கலைஞர்கள் பின்பற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் புதுடெல்லியில் “2019 சோபன்” என்ற 6 நாட்கள் நடைபெறும் இசை மற்றும் நடனத் திருவிழா நடத்தப்பட்டது.
இது புதுதில்லி மாநகராட்சி மன்றத்துடன் (New Delhi Municipal Council - NDMC) இணைந்து புதுதில்லி அரசாலும் சாகித்ய கலா பரிசத்தாலும் நடத்தப்பட்டது.
விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி “எர்னஸ்ட் அண்ட் யங் வாழ்நாள் சாதனை விருதுக்குப்” பெயரிடப்பட்டுள்ளார்.
மிகப்பிரபலமாக EY என அறியப்படும் எர்னஸ்ட் அண்ட் யங் நிபுணத்துவ சேவைகளை அளிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். மேலும் இது நான்கு மிகப்பெரிய கணக்கியல் நிறுவனங்களில் ஒன்றாகும்.