TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 11 , 2019 1987 days 536 0
  • அருணாச்சலப் பிரதேசத்தின் இடா நகரில் தூர்தர்ஷன் அருண் பிரபா என்ற தொலைக் காட்சி அலைவரிசையை பிரதமர் துவக்கி வைத்திருக்கின்றார். இது வடகிழக்கு தொலைக்காட்சி என்ற அலைவரிசைக்குப் பிறகு வடகிழக்குப் பகுதியில் தூர்தர்ஷனின் 2வது அலைவரிசை ஆகும்.
  • மத்தியப் பட்டு வாரியத்துடன் இணைந்து ஜவுளித்துறை அமைச்சகம் புதுதில்லியில் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதியன்று “எழுச்சி பெறும் பட்டு - சாதனை மற்றும் மேலும் முன்னேற்றம்” என்ற நிகழ்ச்சியை நடத்தியிருந்தது.
  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் குஜராத் மாநிலத்துடன் இணைந்து மூன்று வருட அளவிலான ஆசிய சிங்கங்களின் பாதுகாப்புத் திட்டம் என்பதை ஆரம்பித்திருக்கின்றது. இந்த மிகப்பெரிய பூனை வகைகளின் கடைசிப் புகலிடமாக குஜராத் விளங்குகிறது.
    • குஜராத் அரசு, சிங்கங்களுக்கான சிறப்பு கால் நடை மருத்துவமனைகள் மீதும் முழுமையான வசதியுடைய அவசர வண்டிகளுக்காகவும் வேண்டி செலவிடப்படும் 80 கோடி ரூபாயை ஏற்கனவே நிறைவேற்றியிருக்கின்றது.
  • பி.எ. சங்மாவின் நினைவாக மேகாலய மாநில அரசு திக்கிபண்டி மைதானத்திற்கு மறுபெயரிட முடிவெடுத்திருக்கின்றது.
    • துரா நகரில் AMPT சாலையை நோக்கிச் செல்லும் ஒரு சந்திப்புப் பகுதியும் திக்கிபண்டி மைதானத்துடன் சேர்த்து P.A சங்மாவின் பெயரிடப்பட்டு இருக்கின்றது.
  • திரிபுராவின் கடைசி அரசரான மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்யாவின் சிலையை அகர்தலா விமான நிலையத்தில் பிரதமர் திறந்து வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்