TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 12 , 2019 2117 days 618 0
  • கோயம்புத்தூரில் வையம்பாளையத்தில் விவசாயிகளின் தலைவரான நாராயணசாமி நாயுடுவின் சிலை மற்றும் மணி மண்டபத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
  • சிறந்த ஆளுகைக்கான இந்தியாவின் தேசிய மையமும் (India’s National Centre for Good Governance - NCGG) வங்க தேசத்தின் பொது நிர்வாக அமைச்சகமும் இணைந்து 1800 வங்கதேச குடிமையியல் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.
  • கிரேட் இந்தியன் பஸ்டார்ட் (கான மயில்) என்னும் பறவையை அடுத்த வருடம் குஜராத்தில் நடைபெற இருக்கும் இடம்பெயர் உயிரினங்களின் பாதுகாப்பிற்கான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தின் (UN Convention on the Conservation of Migratory Species – CMS COP) 13-வது மாநாட்டிற்கான சின்னமாக மத்திய அரசு அறிவித்திருக்கின்றது. இம்மாநாடு உலக வனவுயிர் மாநாடு என்றும் அறியப்படும்.
    • இந்த சின்னம் மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தனால் வெளியிடப்பட்டதோடு அந்த அமைச்சகத்தால் அப்பறவை செல்லமாக “கிபி” என்று பெயரிடப்பட்டத் தகவலும் அவரால் வெளியிடப்பட்டது.
  • “சட்டம், நீதி மற்றும் நீதித்துறை அதிகாரம் – நீதிபதி P.N. பகவதியின் அணுகுமுறை” என்ற மூல் சந்த் சர்மாவால் எழுதப்பட்ட புத்தகம் இந்தியாவின் தலைமை நீதிபதியால் வெளியிடப்பட்டது.
  • உலக வங்கியின் தலைவர் பதவிக்கு டேவிட் மல்பாஸ் என்பவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் நியமித்திருக்கின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்