சினேகா பார்த்திபராஜா என்ற பெண் வழக்கறிஞர் நாட்டில் முதல்முறையாக தான் எந்த சாதியையும் அல்லது மதத்தையும் சாராதவர் என்று அறிவிக்கும் ஒரு அலுவல்பூர்வமான சான்றிதழைப் பெற்றிருக்கின்றார். இவ்வகையில் அவர் நாட்டில் இம்மாதிரியான சான்றிதழைப் பெறும் முதல் நபராகியுள்ளார்.
ஆசியாவில் மிகப்பெரிய ஒரு வளாகமாக சேலத்தில் ஒரு ஒருங்கிணைப்பு மற்றும் உயர் வடிவமைப்பு கொண்ட பல்நோக்கு கால்நடை மருத்துவமனைப் பூங்காவானது 900 ஏக்கர் பரப்பளவில் ஏற்படுத்தப்பட இருக்கின்றது.
1993 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ம் தேதி அன்று ஆரம்பிக்கப்படுவதாக இரண்டாம் போப் ஜான் பாலால் 1992 ஆம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதியன்று ஏற்படுத்தப்பட்ட உலக உடல் வியாதி தினமானது ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஒரு விருந்து தினமாகும்.
ஆப்கானிஸ்தானைத் தாக்கிய சோவியத் படைகள் வெளியேறிய பிறகும் 1992 ஆம் ஆண்டின் கம்யூனியசச் சார்பு கொண்ட அரசின் பதவி விலகலுக்குப் பிறகும் பதவியேற்ற ஆப்கனிஸ்தானின் முதல் அதிபரான சிப்கதுல்லா முஜாதிதி காலமானார்.
பிரான்சின் 19 வயது கோரண்டின் மௌதெத் ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரு ஹாரிசைத் தோற்கடித்து சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் பதக்கத்தை வென்றார்.
எகிப்திய அதிபர் அப்தல் பதே எல்-சிசி ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவராக எத்தியோப்பியாவில் நடைபெற்ற கண்டத்திற்கான அமைப்பின் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.