TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 18 , 2019 1980 days 579 0
  • மாநிலத்தில் அறக்கட்டளை அல்லது சமூக அமைப்பு அல்லது லாப நோக்கில்லா நிறுவனங்களினால் ஒரே வளாகத்தைக் கொண்ட தனியார் பல்கலைக் கழகத்தை ஏற்படுத்துவதற்கான மசோதாவை தமிழ்நாடு அரசானது அறிமுகப்படுத்தியது.
    • பரிந்துரைக்கப்பட்டுள்ள தனியார்ப் பல்கலைக்கழகமானது பசுமை முயற்சி முன்னெடுப்பு மற்றும் பல்துறை படிப்புகளைக் கொண்டிருக்கும்.
  • தமிழ்நாடு தொழில்முனைவுத் திறன் வளர்ச்சி மற்றும் புத்தாக்க நிறுவனத்தினால் (Tamil Nadu Innovation Grand Challenge - TNIGC) “தமிழ்நாடு புத்தாக்க கிராண்ட் சவால்” என்ற ஒரு “ஸ்டார்ட் அப்” (புதிய தொழில் தொடங்குதல்) சவால் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது.
  • சண்டிகரைச் சேர்ந்த விமானப் படை அதிகாரியான ஹீனா ஜெய்ஸ்வால் இந்திய விமானப் படையின் முதலாவது பெண் விமானப் பொறியாளராக உருவெடுத்துள்ளார். சென்ற ஆண்டு வரையில் விமானப் பொறியாளர் பிரிவு முழுவதும் ஆண்களின் ஆதிக்கமாகவே இருந்தது.
  • மத்திய உள்துறை அமைச்சகமானது பஞ்சாப்பின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் நிலப்பகுதியை பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவைப் பார்வையிடுவதற்கு அங்கீகாரம் கொண்ட நுழைவு மற்றும் வெளியேற்ற புலம்பெயர்வு சோதனைச் சாவடியாக அங்கீகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்