TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 23 , 2019 1975 days 544 0
  • 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத அய்யரின் 165-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
  • தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்வாதார கைத்தறி நிதி விருதுகள், பூம்புகார் மாநில விருதுகள் மற்றும் நிதியியல் விருதுகள் ஆகியவற்றை பட்டு உற்பத்தி செய்யும் 3 விவசாயிகளுக்கு அளித்தார்.
  • மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது (UPSC - Union Public Service Commission) 2019 ஆம் ஆண்டில் நடைபெறும் குடிமைப் பணித் தேர்வுகளிலிருந்து மேல்வகுப்பைச் சேர்ந்த ஏழை மக்கள் 10 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இந்திய அதிகாரியான சந்திரமௌலி இராமநாதனை யுக்திசார் மேலாண்மை, கொள்கை மற்றும் உடன்பாட்டுத் துறையின் (Department of Management Strategy, Policy and Compliance - DMSPC) முக்கியமான பதவிகளில் ஒன்றிற்கு நியமித்துள்ளது.
  • சவுதி அரேபியா சர்வதேச சூரியசக்திக் கூட்டிணைவின் (International Solar Alliance - ISA) கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியா தலைமையிலான இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்பில் இணையும் 73வது நாடாக சவுதி அரேபியா உருவெடுத்துள்ளது.
    • இதன் மூலம் தற்பொழுது ISA-வில் 122 உறுப்பு நாடுகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்