TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 24 , 2019 1974 days 624 0
  • தமிழ்நாடு மாநில ஆளுநர், கே. பிச்சுமணியை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமித்துள்ளார். இவர் துணைவேந்தராகப் பதவியேற்ற நாளிலிருந்து மூன்று வருட காலத்திற்கு அப்பதவியில் இருப்பார்.
  • தனது நீதிமன்ற அறையை தொடர்ச்சியான ரகசிய கண்காணிப்பு கேமராவின் கீழ் கொண்டு வந்த நாட்டின் முதலாவது நீதிபதியாக மதராஸ் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த என்.எம். சுப்பிரமணியம் உருவெடுத்துள்ளார்.
  • பிப்ரவரி 20 அன்று அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் தமது மாநில தினத்தைக் கொண்டாடின.
    • மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முறையே 32-வது மற்றும் 47-வது மாநில தினத்தைக் கொண்டாடின.
  • பஞ்சாப் மாநில அரசானது ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக பிரிட்டீஷ் அரசை மன்னிப்பு கேட்குமாறு கோரியுள்ளது.
    • பிரிட்டீஷ் அரசை மன்னிப்பு கேட்குமாறு கோருவதற்கான தீர்மானமானது பஞ்சாப் மாநில சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
  • தெற்கு மத்திய இரயில்வேயானது நெல்லூர் மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கிடையே புதிய மெய்ன் லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (MEMU - Mainline Electric Multiple Unit) கொண்ட விரைவு இரயில் சேவையைத் தொடங்கியுள்ளது.
  • உணவு பதப்படுத்தும் தொழிற்துறைக்கான மத்திய இணை அமைச்சர் சத்வி நிரஞ்சன் ஜோதி அகர்தலாவின் துலக்கோனா கிராமத்தில் சிகாரியா பெரும் உணவுப் பூங்காவைத் தொடங்கி வைத்தார்.
    • நாட்டின் 17-வது பெரும் உணவுப் பூங்கா (Mega Food Park) இதுவாகும். மேலும் திரிபுரா மாநிலத்தின் முதலாவது பெரும் உணவுப் பூங்கா இதுவாகும்.
  • 4-வது இந்திய–ஆசியக் கருத்தரங்கு மற்றும் மாநாடானது மத்திய வணிக மற்றும் தொழிற்சாலைத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவால் புதுதில்லியில் தொடங்கி வைக்கப்பட்டது.
  • ஆசியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சியான பெங்களுருவில் நடைபெறும் ஏரோ இந்தியா – 2019ல் அமெரிக்காவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான லாக்ஹீடு மார்ட்டின் F-21 என்ற பல பணிகள் மேற்கொள்ளும் ஒரு வகை போர் விமானத்தை அறிமுகப்படுத்தியது.
    • இந்தியாவின் தனித்துவத் திட்டமான இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் டாட்டா மேம்படுத்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து லாக்ஹீடு மார்ட்டின் நிறுவனம் இந்த விமானத்தைத் தயாரிக்க இருக்கின்றது.
  • 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 12 அன்று மத்திய உணவு பதப்படுத்தும் தொழிற்துறை அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் துந்துரு கிராமத்தில் கோதாவரி பெரும் நீர் உணவுப் பூங்காவைத் தொடங்கி வைத்தார்.
    • இது மீன்கள் மற்றும் கடல்சார் பொருட்களைப் பதப்படுத்துவதற்கென்று பிரத்தியேகமாக தொடங்கப்பட்ட இந்தியாவின் முதலாவது பெரும் நீர் உணவுப் பூங்காவாகும்.
  • பருவநிலை மாற்றம், வனங்கள் வளத்தின் மேலாண்மை மற்றும் வனவிலங்கு உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மீதான பணிகளுக்காக கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்துடன் மத்திய அரசாங்கம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • மத்திய பாதுகாப்புப் படையில் பணியாற்றும் அனைத்து வீரர்களும் பணியில் சேரும் போதும் அல்லது விடுப்பில் செல்லும் போதும் வணிகத்திற்காகப் பயன்படும் விமானங்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது.
    • தற்பொழுது வரை, இந்த வசதியானது ஆய்வாளர் அல்லது அதற்கு மேல் நிலைகளில் உள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
  • மேற்கு இந்தியத் தீவினைச் சேர்ந்த கிறிஸ் கெயில் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியின் போது சர்வதேச அளவில் 477 சிக்சர்களை அடித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சாஹித் அப்ரிடியின் சாதனையை முறியடித்துள்ளார். சாஹித் அப்ரிடி 476 சிக்சர்கள் அடித்ததே இதுவரையில் சாதனையாக இருந்தது.
  • ஆண்களுக்கான முதல் தர பிரீமியர் கிரிக்கெட் போட்டியில் முதலாவது பெண் நடுவர்களாகப் பணியாற்றவிருக்கின்ற எலோய்ஸ் செர்டியர் மற்றும் மேரி வால்டிரோன் ஆகிய இருவரும் வரலாற்றுச் சாதனை புரியவிருக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்