திருவான்மியூர் அரசுப் பள்ளியில் பிப்ரவரி 25-ம் தேதியன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் காலை உணவுத் திட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.
நகரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலை உணவை வழங்கிடுவதற்காக சென்னை மாநகராட்சியானது அக்சயப் பாத்திரா எனும் அரசு சாராக் குழுவுடன் கைகோர்த்துள்ளது.
இந்திய விவசாய ஆராய்ச்சி மையத்தின் உவர்நீர் மீன்வளர்ப்புக்கான மத்திய நிறுவனம் சென்னை பட்டினப்பாக்கத்தின் நம்பிக்கை நகரில் மீன்கழிவு சுத்திகரிப்பு மையத்தைத் துவக்கியிருக்கின்றது.
இது நம்பிக்கை நகரில் உள்ள சுய உதவி குழு ஒன்றின் மூலம் இயக்கப்படும்.
ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் பிப்ரவரி 17-ம் தேதியன்று தொடங்கிய 2019 ஆம் ஆண்டுக்கான சர்வதேச வருடாந்திர பாலைவனத் திருவிழாவின் 40-வது பதிப்பு நடைபெற்று முடிந்தது.
இந்த 3 நாள் திருவிழா கட்சிசார் ஏரிக் கோட்டையிலிருந்து ஒரு வண்ணமயமான ஊர்வலத்துடன் ஆரம்பித்தது. இவ்விழா பாலைவன மாநிலத்தின் செழிப்பான கலாச்சார புராதனத்தைக் கோடிட்டுக் காண்பிக்கின்றது.
2022 ஆம் ஆண்டில் மேகாலயாவில் நடத்தப்பட இருக்கும் தேசிய விளையாட்டுக்களுக்கான சின்னமாக மேகாலயா மாநில விலங்கான பெரிய புள்ளிச் சிறுத்தையானது தேர்ந்தெடுக்கப்பட்டது.
கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்தைச் சேர்ந்த எலிஸ் மெர்டென்ஸ் என்ற வீராங்கனை இத்தாலியின் சிமோனா ஹலேப்பைத் தோற்கடித்து தனது வாழ்நாளின் மிக உயர்ந்த பதக்கத்தைத் கைப்பற்றி உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் தடுப்புக் காவல் முகாமில் நான்கு வருடங்களை கழித்த சூடானின் ஒரு அகதி ஆர்வலரான அப்துல் அஜிஸ் முகமத், புகலிடம் நாடுபவர்கள் மீதான ஆஸ்திரேலிய அரசின் மிகக் கடுமையான கொள்கையின் தீவிரத்தை வெளிப்படுத்திக் காட்டியதற்காக சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் மார்ட்டின் என்னல்ஸ் 2019 எனும் ஒரு சர்வதேச மனித உரிமைகள் விருதை வென்றிருக்கின்றார்.
ஒடிசாவின் கலிங்கா மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் நேபாளத்தை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி பெண்களுக்கான சர்வதேச கால்பந்து சுற்றுப் பயணத்திற்கான ஹீரோ தங்கக் கோப்பையை மியான்மர் வென்றது.
நாக்பூரில் ரஞ்சி சாம்பியனான விதர்பா அணியானது ரெஸ்ட் ஆப் இந்தியா அணியை வீழ்த்தி கிரிக்கெட் விளையாட்டில் இரானிக் கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது. மும்பை மற்றும் கர்நாடக அணிகளையடுத்து தொடர்ச்சியாக இரண்டு இரானிக் கோப்பைகளை வென்ற 3-வது அணியாக தற்போது விதர்பா அணி உருவெடுத்திருக்கின்றது.
அசாமின் கௌஹாத்தியில் நடைபெற்ற 83-வது யோனக்ஸ் சன்ரைஸ் சீனியர் பேட்மிண்டன் தேசியப் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் போட்டியில் P.V. சிந்துவை வீழ்த்தி சாய்னா நேவால் தனது பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்டார்.