TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 27 , 2019 1971 days 606 0
  • சென்னை உயர்நீதிமன்றமானது அனைத்து பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருவேளை அவர்களது தேர்தல் சட்ட விரோதமானது என்று அறிவிக்கப்பட்டால் அவர்கள் தங்கள் ஊதியம், மற்ற படிகள் ஆகியவற்றை அபராதத்துடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
    • இந்த தகுதி நீக்க உத்தரவு அவர்களது பதவிக் காலம் முடிந்த பின்போ அல்லது முடிவடைவதற்கோ முன்போ பொருந்தும்.
  • நீதிபதி A. ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக் காலத்தை தமிழக அரசு அடுத்த நான்கு மாதங்களுக்கு நீட்டித்திருக்கின்றது.
    • 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி முன்னாள் முதல்வர் J. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சூழ்நிலைகள் பற்றி ஆராய இந்த ஒரு நபர் ஆணையத்தை மாநில அரசு நியமித்தது.
  • தமிழ்நாடு அரசு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாட்டின் உயர் வம்ச மற்றும் கலப்பின காளைகளுக்கான புதிய உறை விந்தணு சேமிப்பு மையத்தை சேலத்தின் ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்காவில் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கின்றது.
  • இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் பாலகோட் எனும் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது எனும் பயங்கரவாத அமைப்பின் மிகப்பெரிய பயிற்சிக் குழுவின் மீது விமானத் தாக்குதல்களை நடத்தியது. இதற்காக மிராஜ் 2000 வகை போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
  • இந்திய ரிசர்வ் வங்கி, தலைமை செயல் அதிகாரிகளின் ஊதியத்தை வங்கிகளின் அளவுருக்களான இருப்புநிலை அறிக்கை, கடன் விதிமுறை மீறல், லாபங்கள் மற்றும் நிர்வாக அறிக்கை ஆகியவற்றுடன் இணைப்பதற்காக ஒரு புதிய விதிமுறைகளை ஏற்படுத்திட பணியாற்றிக் கொண்டிருக்கின்றது.
  • பிப்ரவரி 19-ம் அன்று மத்திய அமைச்சரவை முத்தலாக் மீதான அவசரச் சட்டத்திற்கு தனது அனுமதியை அளித்துள்ளது. இது கடந்த ஒரு வருடத்திற்குள்ளாக மூன்றாவது முறையாகும்.
    • இச்சட்டம் இஸ்லாமிய ஆண்களால் அளிக்கப்படும் உடனடி முத்தலாக் முறையை ஒரு தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கின்றது.
  • மகாராஷ்டிரா அரசு பிப்ரவரி 19-ம் தேதியை சிவாஜியின் பிறந்த நாளோடு நினைவுபடுத்தி சிவாஜி ஜெயந்தி எனப்படும் மகாராஜா சிவாஜி தினமாக அனுசரிக்கின்றது.
  • நடிகை கரீனா கபூர் கான் சுவஸ்த் தடுப்பு மருந்து இந்திய பரப்புரையின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
    • இந்த சுவஸ்த் தடுப்பு மருந்து இந்தியப் பரப்புரையானது இந்திய நிறுவனத்தாலும் நெட்வொர்க் 18 அமைப்பாலும் இணைந்து வெளியிடப்பட்டிருக்கின்றது.
  • மத்திய உள்துறை அமைச்சகம் அசாம் ரைபிள்ஸ் படையினரை அவர்கள் படைத் தலைமையகத்தை மிசோரம் மாநிலத்தின் தலைநகரமான அய்ஸ்வால் எனும் பகுதியிலிருந்து ஜோகாவ்சாங் பகுதிக்கு மே மாதம் 31-ம் தேதிக்குள்ளாக மாற்றியமைக்க உத்தரவிட்டுள்ளது.
    • தற்சமயம் அசாம் ரைபிள்ஸ் படையின் தலைமையகமானது அய்ஸ்வால் நகரத்தில் உள்ள கருவூலம் மற்றும் ஜோடின் சதுக்கத்தில் அமைந்திருக்கின்றது.
  • இந்தியாவின் டென்னிஸ் வீரரான பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் தனது வாழ்நாளின் சிறந்த சாதனையாக ATP தரவரிசையின் சமீபத்திய பட்டியலில் 94-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்