ஆற்றுக்கால் பொங்கல் திருவிழாவை திருவனந்தபுரம் நடத்தியிருக்கின்றது. ஒரு நாளில் உலகின் மிகப்பெரிய அளவில் பெண்கள் பங்கேற்கும் சமய பண்டிகைகளில் இது ஒன்றாகும்.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகின்றது. இதற்கு காரணம் இங்கு பெண்கள் மட்டுமே சடங்குகள் செய்வர்.
பிரதமர் டெல்லியின் இஸ்கான் கோவிலில் 670 பக்கங்களைக் கொண்டதும், 800 கிலோ கிராம் எடை கொண்டதுமான ஒரு மிகப்பெரிய பகவத் கீதை புத்தகத்தை வெளியிட்டார்.
சர்வதேச கிருஷ்ணா பக்தி உணர்வுச் சங்கம் (International Society for Krishna Consciousness) என்றழைக்கப்படும் இஸ்கானைப் பொறுத்த வரையில் இந்தப் புத்தகம் புனிதக் கருத்துகளின் தத்துவத்தை அச்சிடப்பட்ட வகையில் மிகப்பெரிய புத்தகமாக இருக்கும்.
வரி ஏய்ப்பு மற்றும் வரி தவிர்த்தலைக் கட்டுப்படுத்துவதற்காக வரிவிதிப்புகளில் தகவல்கள் மற்றும் அதைச் சேகரிப்பதில் உதவி ஆகியவற்றின் பரிமாற்றத்திற்கான ஒரு ஒப்பந்தத்தில் இந்தியாவும் புருனேவும் புதுதில்லியில் கையெழுத்திட்டன.
பெங்களூருவைச் சேர்ந்த செமி கண்டக்டர் நிறுவனமான சிக்னல்சிப் நிறுவனம் 4G/LTE மற்றும் 5G NR MODEM ஆகியவற்றுக்காக இந்தியாவின் உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் முதலாவது செமி கண்டக்டர் சில்லுகளை புதுதில்லியில் ஒரு நிகழ்ச்சியில் வெளியிட்டது.
ராஜஸ்தானின் பகரூ நகரில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி டைடன்வாலா அருங்காட்சியகத்தைத் துவக்கி வைத்தார். இது சிபா சமூகத்தின் பாரம்பரியமான மற்றும் கைவேலையாலான அச்சிடும் கலையை காட்சிப்படுத்துகின்றது.
சீர்திருத்தங்களை எளிதாக்கல் என்பதன் மீதான BCG-IBA அறிக்கை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் அருண் ஜெட்லியால் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி சீர்திருத்தங்களுக்கான நோக்கங்களை நிறைவேற்றுவதில் ஈடுபட்டிருக்கும் அனைத்துப் பொதுத் துறை வங்கிகளிலும் பஞ்சாப் தேசிய வங்கி முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது.
இலங்கை அணியின் மட்டை வீரரான சனத் ஜெயசூரியா ஊழல் எதிர்ப்பு விசாரணையை தடுத்தமையை ஒப்புக் கொண்டதற்குப் பிறகு 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி முதல் பின்தேதியிட்ட நாளிலிருந்து இரண்டு வருடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளார்.