முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் எழுதிய “Undaunted : Saving the Idea of India” என்ற புத்தகத்தை முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வெளியிட்டார்.
இந்திய ஏவுகணைத் திட்டங்களில் தன்னுடைய தனித்துவ தலைமைப் பண்பிற்காக “2019 ஏவுகணை அமைப்புகள் விருது” எனும் பெருமை விருதினை பாதுகப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் G. சதீஷ் ரெட்டிக்கு அமெரிக்க வானியல் மற்றும் விண்வெளியியல் நிறுவனம் வழங்கியிருக்கின்றது.
வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் நகைகள், பத்திர ஆவணங்கள் மற்றும் இதர மதிப்பு மிகுந்த பொருட்களைப் பாதுகாக்கும் நோக்குடன் எந்த ஒரு காப்பீட்டு நிறுவனத்தாலும் அளிக்கப்படும் முதலாவது வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்திற்கென்று தனியான ஒரு காப்பீடாக இப்கோ டோக்கியோ பொதுக் காப்பீட்டு நிறுவனம் “வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்” திட்டத்தை வெளியிட்டது.
மூன்றாவது முறையாக இந்திய தேசியப் பாதுகாப்புக் குழுவால் வழங்கப்படும் பெருமைமிகு சர்வஸ்ரேஷ்த சுரக்ஷா புரஸ்கர் (வெண்கலக் கோப்பை) என்ற விருதை 2018-ம் ஆண்டிற்கான பிரிவில் விவசாயத்திற்கான ரசாயன உரங்கள் நிறுவனமான பாரிஜாதம் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் “நீடித்தத் தன்மைக்கான பசுமை சகாப்தம்” என்ற சர்வதேச நீடித்த நிலைத் தன்மைக்கான விருதை போர்ச்சுகலின் லிஸ்பன் நகரில் பெற்றிருக்கின்றது.
மேலும் இந்நிறுவனம் உற்பத்திப் பொருளின் தரத்தில் புதிய முத்திரைகளை உருவாக்கிட மேற்கொண்ட தனது பெரு முயற்சிகளின் அங்கீகாரத்திற்கு வேண்டி “தரம் மற்றும் வியாபார நிபுணத்துவ விருதினையும்” வென்றுள்ளது.