TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 8 , 2019 1962 days 547 0
  • பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் (Bhabha Atomic Research Centre) இயக்குனராக அஜீத் குமார் மொகந்தி மூன்று ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • போர்ப்ஸின் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 6 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி பிடித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த 106 கோடீஸ்வரர்கள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
  • குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில் உள்ள மாணவர்களின் படித்தல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்திற்காக “போலோ” என்ற செயலியை கூகுள் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  • சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் மூன்று ஊழல் எதிர்ப்புக் குறியீடுகளை மீறிய குற்றத்திற்காக ஜிம்பாபேவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் இயக்குனரான எனோக் இகோப்பை ICC (International Cricket Council) பத்து ஆண்டு காலத்திற்குத் தடை செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்