TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 9 , 2019 1961 days 538 0
  • தமிழ்நாட்டின் எண்ணூரில் உள்ள இந்தியன் எண்ணெய்க் கழகத்தின் நீர்த்த இயற்கை எரிவாயு முனையத்தை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். தென் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைந்த முதலாவது LNG (Liquified Natural Gas) முனையம் இதுவாகும்.
  • சென்னையில் உள்ள அனைத்து 19 நிலத்தடி மெட்ரோ நிலையங்களும் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் பயணிகளுக்காக “இலவசப் பயன்பாட்டு” தரைவழித் தொலைபேசி வசதியைப் பெறவிருக்கின்றன.
  • பாரிஸில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் நொய்சியல் ஓபன் போட்டியில் இந்தியாவின் 61-வது கிராண்ட் மாஸ்டராக ஈரோட்டைச் சேர்ந்த 16 வயதான P. இனியன் உருவெடுத்துள்ளார். 2018 ஆம் ஆண்டிற்கான அளவு மற்றும் மண்டலம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக
  • புகழ்பெற்ற விமான நிலைய சேவைத் தர (ASQ - Airport Service Quality) விருதை புவனேஸ்வரில் உள்ள பிஜூ பட்நாயக் சர்வதேச விமான நிலையம் வென்று இருக்கின்றது.
  • 2019 ஆம் ஆண்டின் சர்வதேச பெண்கள் தின கொண்டாட்டத்தின் போது 2019 ஆம் ஆண்டின் தேசியப் பெண்கள் வாழ்வாதார சந்திப்பானது உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள தீன்தயாள் ஹஸ்த்கலா சன்குலில் நடைபெற்றது.
  • சவுமியா சுவாமிநாதன் உலக சுகாதார நிறுவனத்தின் துணைப் பொது இயக்குநர் பதவியிலிருந்து தலைமை அறிவியலாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
  • “இந்தியாவின் பெரிய அளவிலான தட்டம்மை தடுப்பூசிப் பிரச்சாரமானது” 2010 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளுக்கிடையே பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளைக் காப்பாற்ற உதவியதாக இ-லைப் பத்தரிக்கையில் வெளியான ஆய்வு முடிவு கூறுகிறது.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க தொலைக்காட்சி நிபுணரான பத்மா லட்சுமி UNDP-ன் “நல்லெண்ணத் தூதராக” ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் (UNDP - United Nations Development Programme) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • லோக் ஆயுக்தாவின் பதவிக் காலத்தை எட்டு ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக குறைப்பதற்கு லோக் ஆயுக்தா சட்டத்தை இராஜஸ்தான் அரசு திருத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்