தூர்தர்ஷனின் இலவசக் குடையின் (Dish antenna) மூலம் இந்தியாவின் செயற்கைக்கோள் மூலமான ஒளிபரப்புப் பகுதி மீதான மேலும் 11 மாநில தொலைக் காட்சி அலைவரிசைகளை பிரசார் பாரதி கொண்டு வந்துள்ளதாக இந்தியப் பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்த 11 அலைவரிசைகள் வடகிழக்கு மாநிலங்களில் 5 மாநிலங்களைக் கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை 112 நபர்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கினார்.
இந்தியாவில் மருத்துவ உதவிகள், கல்வி மற்றும் வணிக வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் மாலத் தீவு குடிமக்களுக்காக தாராளவாத பயண அனுமதி சீட்டை (visa) அளிக்கக்கூடிய இந்தியா மற்றும் மாலத் தீவுகள் ஆகிய நாடுகளுக்கிடையேயான புதிய பயண அனுமதிச் சீட்டு ஒப்பந்தமானது 2019 ஆம் ஆண்டு மார்ச் 11 லிருந்து நடைமுறைக்கு வந்தது.
பாலஸ்தீன நாட்டின் அதிபரான மகமூத் அப்பாஸால் அந்நாட்டின் புதிய பிரதமராக மகமூத் சத்யேக் அறிவிக்கப்பட்டுள்ளார்.