தற்பொழுது தமிழ்நாடு அரசு அலுவலர்கள் தங்கள் உயர் அதிகாரிகளிடமிருந்து முன் அனுமதி பெற்ற பின்பு ரூ.25,000 வரை பரிசுப் பொருட்களைப் பெற முடியும். இதற்கு முன் ஒருவர் ரூ.5000 வரை மட்டுமே பரிசுப் பொருட்களைப் பெற முடியும்.
பயனாளர்களுக்கு உகந்த மற்றும் பசுமை வீடுகள் என்ற கருத்தை ஏற்றுக் கொள்வதற்காக சென்னை மெட்ரோ இரயிலின் நிலத்தடி இரயில் நிலையங்களுக்கு இந்தியப் பசுமைக் கட்டிடங்கள் ஆணையத்தால் (IGBC - Indian Green Building Council) பிளாட்டினம் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
IGBC தரமிடல் அமைப்பு என்பது தன்விருப்பம் கொண்ட, பொதுக் கருத்திசைவு அடிப்படையிலான சந்தையால் நிர்வகிக்கப்படும் வீட்டு வசதித் திட்டங்களாகும்.
இந்தத் தரமிடல் அமைப்பானது இயற்கையின் (பஞ்சபூதங்கள்) 5 கூறுகளை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இது பண்டைய கட்டிடக் கலையின் நடைமுறைகள் மற்றும் நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் ஒரு சரியான கலவையாகும்.
சூலூர் விமானப் படைத் தளத்திற்கு “நிஷாந்த்” எனப்படும் குடியரசுத் தலைவர் கௌரவமானது இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்தால் வழங்கப்பட்டது.
குடியரசுத் தலைவரின் வண்ணங்களுக்கான கௌரவம் என்பது போர் மற்றும் அமைதிக் காலங்களில் நாட்டிற்காக சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படும் விருதுகளில் ஒன்றாகும்.
இந்தியாவுடன் ஆழ்ந்த மற்றும் வலுவான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை ஏற்படுத்துவதற்காக மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள ரவீந்திர பாரதி அருங்காட்சியகத்திற்கு ரூ.22 இலட்சத்தை வழங்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய ஓபன் லேசர் பாய்மர சாம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான லேசர் ஸ்டேண்டர்டு போட்டியில் இந்தியாவின் முதலாவது வெண்கலப் பதக்கத்தை மும்பையைச் சேர்ந்த உபமான்யா தத்தா வென்றுள்ளார்.