மிகவும் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரான டி.கே பட்டமாளின் 100-வது நினைவு தினம் 2019 ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று அனுசரிக்கப்படவிருக்கிறது.
இசைக் கச்சேரிகளில் ராகம், தாளம் மற்றும் பல்லவி ஆகிய மூன்றையும் நிகழ்த்திய முதலாவது பெண்மணி இவராவார்.
உதய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களால் நடத்தப்பட்ட வஸ்த்ரதான் பிரச்சாரம் என்ற இலவச ஆடைகள் நன்கொடைப் பிரச்சாரமானது 3 இலட்சம் ஆடைகளைப் பெற்றுள்ளது. நன்கொடை வழங்குவதற்காக மிக அதிக அளவிலான ஆடைகளைத் திரட்டியதற்காக இது கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
திபெத் பகுதியைச் சார்ந்த சமூக செயல்பாட்டாளர்கள் தங்களது 60வது தேசிய எழுச்சி தினத்தைக் கொண்டாடினர்.
இந்த நாளில் தங்களது தாய்நாட்டின் மீது கம்யூனிச நாடான சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து லாசாவின் தெருக்களில் ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் திரண்டனர்.
இந்தியக் காவல்துறைப் பணியாளர்களின் பதவிக் காலம் நிறைவடைய குறைந்த பட்சம் 6 மாதங்கள் இருந்தாலும் அவர்கள் காவல்துறை பொது இயக்குநர் (DGP - Director General of Poilce) பதவிக்கு தகுதியுடையவர்கள் என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கு முன்பு இப்பதவிக்கு வருபவர்களின் பதவிக் காலம் நிறைவடைய கட்டாயம் 2 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்று விதிமுறை இருந்தது.
சென்னையின் கிண்டி தேசியப் பூங்கா மற்றும் ராஜ் பவன் பாதுக்கப்பட்ட காடுகளில் வருடாந்திர வனவிலங்கு கணக்கெடுப்பின் போது 31 புல்வாய் இன மான்கள் மற்றும் 87 புள்ளி மான்கள் இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதியானது பிரிட்டிஷ் இந்தியாவில் மகாத்மா காந்தியின் தலைமையில் நடைபெற்ற அகிம்சை வழியிலான உப்பு சத்தியாக்கிரகத்தின் 89-வது நினைவு தினத்தைக் குறிக்கிறது.
கார்ப்பரேஷன் வங்கியானது மார்ச் 12 ஆம் தேதியன்று நாடு முழுவதும் உள்ள தனது வங்கியின் பல்வேறு மையங்களில் தனது 114-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. இத்தினத்தில் தான் 1906 ஆம் ஆண்டு முதல் கான் பகதூர் ஹஜ்ஜி அப்துல்லாஹ் ஹஜ்ஜி காசிம் சாஹிப் பகதூர் என்பவரின் தலைமையில் கர்நாடகாவின் உடுப்பியில் இது செயல்படத் துவங்கியது.
புகழ்பெற்ற நாவலாசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனரான வேத் ராஹி என்பவருக்கு புகழ்பெற்ற குசுமக்ராஜ் ராஷ்டிரிய சாஹித்ய புரஸ்கார் விருது வழங்கப்பட விருக்கிறது.
குசுமக்ராஜ் என்று அழைக்கப்படும் மராத்தியக் கவிஞர் மற்றும் நாடக ஆசிரியரான மறைந்த விவி சிர்வாத்கர் என்பவரின் நினைவாக குசுமக்ராஜ் விருது ஏற்படுத்தப்பட்டது.