TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 23 , 2017 2576 days 899 0
  • தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவின் (National Assessment and Accreditation Council) இயக்குநராக பணியாற்றி வரும் பேராசிரியர் திரேந்திர பால் சிங் பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commissions) தலைவராக  அடுத்த ஐந்தாண்டு கால பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் முன்பிருந்த பேராசிரியர் வேத பிரகாஷ் ஓய்வு பெற்றதை அடுத்து 2017ன் ஏப்ரல் மாதத்திலிருந்து இப்பதவி நிரப்பப்படாமல் இருந்தது.
  • இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினரைத் துணை வகைப்படுத்துதல் தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின்  செயற்காலத்தை 12 வார காலங்கள் நீட்டித்து 2018 ஏப்ரல் 2 வரை செயல்பட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்