TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 17 , 2019 2084 days 656 0
  • ஜப்பானில் முகாமிட்டுள்ள அமெரிக்க சிறப்புப் படைக் குழுமமானது ஐதராபாத்தில் உள்ள தேசிய பாதுகாப்புப் படையினருடன் (NSG – National Security Guard) இணைந்து இரு நாடுகளின் ஆயுதப் படைகளின் திறன்களை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஒரு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
    • 1986 ஆம் ஆண்டு செப்டம்பரில் தேசிய பாதுகாப்புப் படையானது உருவாக்கப்பட்டது. சுதீப் லக்காதியா இதன் தற்போதைய பொது இயக்குநர் ஆவார்.
  • ஐக்கிய நாடுகளால் தடை செய்யப்பட்டவர்கள் பட்டியலில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரை சேர்ப்பதற்கான பிரிட்டிஷ், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வேண்டுகோளை சீனா மீண்டும் நிறுத்தி வைத்துள்ளது
    • இந்த ஐக்கிய நாடுகளின் தடையானது அவரை உலகளாவிய அளவில் பயணத் தடை, சொத்துகள் முடக்கம் மற்றும் ஆயுதத் தடை ஆகியவற்றிற்கு உட்படுத்தும்.
  • இந்தியாவின் நுகர்வோர் நிறுவனங்கள் தங்கள் சோப்பு மற்றும் பற்பசை தயாரிப்புகளிலிருந்து சர்ச்சைக்குரிய பாக்டீரிய எதிர்ப்பு பொருளான “ட்ரைகுளோசான்”-ஐ நீக்கியுள்ளன.
    • ட்ரைகுளோசானின் பயன்பாடானது அசாதாரணமான நாளமில்லா மண்டல அமைப்பு, தைராய்டு ஹார்மோன் சமிக்ஞை மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
  • சீனாவின் நீண்ட ஏவுதலான 3B ராக்கெட் ஆனது நாட்டின் 1970 ஆம் ஆண்டு முதலான விண்வெளி திட்டத்தில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த புதிய தகவல்தொடர்பு செயற்கைக்கோளை சுற்றுப் பாதையில் செலுத்தியதன் மூலம் தனது 300-வது வெற்றியை சீனா பதிவு செய்துள்ளது.
  • சென்னையை அடிப்படையாகக் கொண்ட 13 வயது இசைக் கலைஞரான லிதியான் நாதஸ்வரம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற சர்வதேச இசைத் திறன் நிகழ்ச்சியான “The World’s Best” - ல் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை வென்றுள்ளார்.
  • கஜகஸ்தானின் ஆஸ்தானாவில் நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன்ஷிப்பில் இந்திய கிராண்ட் மாஸ்டரான B அதிபன் மற்றும் சூர்யா சேகர் கங்குலி ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்