இந்தியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளின் இராணுவத்திற்கிடையே இந்தோ-ஓமன் கூட்டுப் பயிற்சியான நாகா III ஆனது ஓமனில் நடந்து முடிந்தது.
முதல் பிரிக்ஸ் ஷெர்பா கூடுகையானது பிரேசில் நாட்டின் தலைமையில் சர்வதேச குற்றத் தடுப்பு மற்றும் பயங்கரவாதத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி பிரேசிலின் கியூரிடிபாவில் நடைபெற்றது.
வால்ட்டெரி போட்டாஸ் தனது உலக சாம்பியன் அணியின் சக உறுப்பினரான லெவிஸ் ஹாமில்டன்னை வீழ்த்தி இப்பருவத்தின் துவக்கத்திற்கான ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை மெர்சிடிஸ் அணிக்காக வென்றார்.
நாசாவின் நிக் ஹேக், ரஷ்யாவின் அலெக்ஸே ஓவ்ச்சினின் மற்றும் கிறிஸ்டினா கோச் ஆகியோர் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தனர்.
ரஷ்யாவின் சோயுஸ் விண்கலமானது இவர்களை சுமந்து சென்றது.
பெங்களூருவின் கால்பந்து கிளப் (FC) அணியானது கோவா அணியை வீழ்த்தி தனது முதல் இந்தியன் சூப்பர் லீக் பட்டத்தை (ISL – Indian Super League) வென்றது.