USA Today என்ற பத்திரிக்கையின் “பொழுதுபோக்குத் துறையில் மிக சக்தி வாய்ந்த பெண்களின்” பட்டியலில் ஓப்ரா வின்பிரே மற்றும் மெரில் ஸ்டிரீப் ஆகிய சர்வதேச நட்சத்திரங்களுடன் இந்தியாவைச் சேர்ந்த நடிகையான பிரியங்கா சோப்ரா ஜோனசும் இணைந்துள்ளார்.
USA Today என்பது சர்வதேச அளவில் விநியோகிக்கப்படும் அமெரிக்க தினசரியாகும். மேலும் இது அமெரிக்காவில் அதிக அளவில் விநியோகிக்கப்படுகிறது.
நாட்டில் சிட்டுக் குருவி மீட்பு மற்றும் ஆராய்ச்சி மையங்களை (SRRC - Sparrow Rescue and Research Centres) அமைப்பதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ள ஹரியானா மாநில வன மற்றும் வன விலங்குத் துறையானது முதன்முறையாக உலக சிட்டுக் குருவி தினத்தை கொண்டாடுகிறது.
இந்த நிகழ்ச்சியானது பஞ்சகுலாவில் உள்ள பிர் சிகர்ஹாக் வனவிலங்கு சரணாலயத்தில் நடைபெறவிருக்கிறது.
ஜீன் - ஹென்றி சென்ட் என்பவர் ஹைட்டியின் பிரதமராக பதவியேற்று ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர் அப்பதவியில் இருந்து விலகினார்.