காசாவில் நிகழ்ந்த வன்முறையின் காரணமாக இஸ்ரேல் நாட்டிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் 14 நாடுகளுடன் இணைந்து இந்தியா அந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
மத்திய அமைச்சர்களான பியூஷ் கோயல் மற்றும் டாக்டர் ஹர்ஷ வர்தன் உள்பட ஏழு இந்தியர்கள் பருவநிலை மாற்றங்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக “2019 ஆம் ஆண்டின் காலநிலைக் கொள்கையில் ஈடுபட்ட உலகின் மிக செல்வாக்கு மிக்க 100 நபர்கள்” என்ற பட்டியலில் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளனர்.
மேலும் இதே பட்டியலில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெளிவரும் பத்திரிக்கையான “டவுன் டூ எர்த்தின்“ ஆசிரியரான சுனிதா நரைனும் இடம் பிடித்துள்ளார்.