இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான நவீன் சாவ்லா எழுதிய “Every Vote Counts” எனும் புத்தகமானது முன்னாள் குடியரசு துணைத் தலைவரான ஹமீத் அன்சாரியால் புதுடெல்லியில் வெளியிடப்பட்டது.
சென்னையில் நடந்த போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மட்டையாளரான சுரேஷ் ரெய்னா IPL போட்டிகளில் 5000 ஓட்டங்களைக் கடந்த முதல் மட்டையாளராக ஆகியுள்ளார்.
மகாராஷ்டிராவின் மும்பையில் ஹம்சஃபார் அறக்கட்டளை மூலமாக இந்தியாவின் முதல் HIV சிகிச்சை மையம் மற்றும் LGBTQ சமுதாயத்தினருக்கான முழுமையான மருத்துவ நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
பரோடா வங்கியானது அதன் ஊழியர்களின் குழந்தைகளுக்கான மழலையர் காப்பகம்/குழந்தைகள் பராமரிப்பு வசதியைத் தொடங்கிய முதல் இந்திய பொதுத் துறை வங்கியாக மாறியுள்ளது.
மத்திய அரசானது 2018-19 நிதியாண்டிற்கான முதலீடுகளை 85,000 கோடி ரூபாய் அளவில் திரும்பப் பெற்று நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் தாண்டி உள்ளது.
2017 – 18 ஆம் ஆண்டில் ரூ. 1 லட்சம் கோடி அளவில் திரும்பப் பெற்ற பிறகு இரண்டாவது முறையாக ஒரே நிதியாண்டில் அதிக முதலீடுகளை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
துபாய் கலை விழாவின் 13-வது பதிப்பானது 42 நாடுகளிலிருந்து பங்கு பெற்ற 92 சமகால மற்றும் நவீன காட்சியகங்களுடன் நடத்தப்பட்டது.